"மொத்தமாக மாறிடுச்சே.." லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தமிழகம் முழுக்க இதை நோட் பண்ணீங்களா
சென்னை: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் மிக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். இந்த முறை லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு கட்ட தேர்தலுக்குப் பிறகு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பொதுவாக இரண்டாம் கட்ட தேர்தலில் தான் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் நிலையில், ஆனால் இந்த முறை முதல் கட்ட தேர்தலிலேயே நடக்கிறது. ஏழு
கட்டுப்பாடுகள்: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாகப் பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான தொகையை மட்டுமே ரொக்கமாகப் பொதுமக்கள் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். பறக்கும்படையாயினர் கேட்டால் காரணத்தை மட்டும் சொன்னால் போதும்.
அதேநேரம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்கள் கட்டாயம் தேவை. பறக்கும் படையினர் தேடுதல் போது கையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதற்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். ரூ.10 லட்சத்திற்கு மேலான தொகை என்றால் உடனடியாக வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
சோதனை: உரியை ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு அந்த பணத்தைப் பெற்றுச்செல்லலாம். தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இன்று காலை முதலே தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனைகளை ஆரம்பித்தன. டெம்போ, கார் உள்ளிட்ட வாகனங்களைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சோதனைகளை கேமராவிலும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதும் தமிழ்நாட்டில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியிருந்தார். அதாவது தமிழ்நாடு அரசியலில் பணப் புழக்கம் அதிகம் இருப்பது தெரியும் என்றும் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடும் நடவடிக்கைகள்: மேலும் மற்றொரு தென்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பண வினியோகம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே, பண விஷயத்தில் தேர்தல் ஆணையம் இந்த முறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றே சொல்லப்பட்டது. அதற்கேற்ப முதல் நாளான இன்றே வாகன சோதனைகள் தீவிரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications