ரூ.6000 நிவாரணத் தொகை.. எந்த டவுட்டு வந்தாலும் கால் பண்ணுங்க! இலவச உதவி எண்களை அறிவித்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ₹6,000 நிவாரணத் தொகை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறந்து உள்ள தமிழ்நாடு அரசு அதற்கான உதவி எண்களை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Helpline number announced for Rs.6000 relief fund by TN government

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள். அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000/- பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (17.12.2023) சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10.00 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும். மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் 17.12.2023 முதல், காலை 8.00 மணி முதல் இரவு 8.0 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+