ஹேமா கமிட்டியா? ஷாக்கான ரஜினி? விஜய், கமல், தனுஷ் மவுனம் ஏன்? த்ரிஷா, நயன் பேசுவார்களா?
சென்னை: ஹேமா கமிட்டி பற்றி பெரிய நடிகர்கள் மவுனம் காப்பதாக நடிகர் ராதிகா உட்பட சில நடிகைகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுச் சரியானதா? அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது?
பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பற்றி வெளிப்படையாகப் போட்டு உடைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது 'மீ டூ’ இயக்கம். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த இயக்கம் உலகம் முழுக்க பெண்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கு நீதி கேட்ட ஒரு இயக்கமாகச் செயல்பட்டது. அப்போதுதான் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டை பொதுவெளியில் முன்வைத்தார் பாடகி சின்மயி. அந்த விவகாரம் தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்டது.

அதன் பின்னர் இப்போது அதே மாதிரியான அதிர்வலையைக் கிளப்பி உள்ளது 'ஹேமா கமிட்டி’யின் அறிக்கை. மலையாள சினிமாவை தாண்டி இந்த அறிக்கை அதிகம் விவாதிக்கப்படுவது தமிழ் சினிமாவில்தான். தெலுங்கு, கன்னடம் ஆகிய துறைகளில் உள்ள நடிகைகள் இந்தளவுக்கு இன்னும் வேகம் எடுக்கவில்லை.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகையான ராதிகா இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசி வருகிறார். தன்னிடம் மதுபோதையில் வந்து தவறாக நடக்க முயன்ற நடிகரை கடுமையாக திட்டினேன் என்றும் அவர் பேசி இருக்கிறார். கூடவே கேரளாவில் ஷூட்டிங்கின் போது சிலர் வீடியோ காட்சிகளைப் பார்த்து சிரிந்து கொண்டிருந்தனர் என்றும் அது என்னவென்று கேட்டபோது கேரவன் உள்ளாக நடிகைகள் துணி மாற்றுவதை மறைமுகமாக கேமரா வைத்து எடுத்து அதைப் போட்டுப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை அவர் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பெரிய நடிகர்கள் பேசினால் பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு அது ஆதரவாக இருக்கும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு கதை இருக்கிறது. எனக்குத் தெரியும். ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் மவுனம் தப்பாகப் புரிந்து கொள்ளப்படும். ஆகவே மவுனம் கலைத்து ஆதரவு கொடுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாகச் சீமான் மீது பல வருடங்களாக ஒரு விஜயலட்சுமி புகார் கூறிவருகிறார். சின்மயி கூட பல ஆண்டுகளாக பல முறை இது பற்றிப் பேசி இருக்கிறார். அப்போது எல்லாம் ஒரு சீனியர் நடிகைகள் கூட இந்த இருவருக்கும் ஆதரவாக வாய் திறக்கவே இல்லை. அந்த மவுனம் ஏன் நடந்தது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இதனிடையே ராதிகாவின் பேச்சுக்கு நடிகை கஸ்தூரியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கேரளாவில் போடப்பட்ட ஹேமா கமிட்டி பற்றி உடனடியாக தனது கருத்துகளைச் சொன்னவர் நடிகை விசித்ரா. அவர் ஆந்திர சினிமாவில் தன் மீது நடத்தப்பட்ட பாலியல் சீண்டல் பற்றி நடிகர் சங்கத்தில் புகார் அளித்த போது ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சட்டரீதியாகவே தான் போராடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகள் முன்னால் பொள்ளாச்சி ஷுட்டிங் ஸ்பாட்டில் தன்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய வந்த மலையாள இயக்குநர், தயாரிப்பாளர் பற்றிய விவரங்களை இப்போது பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை சார்மிளா. இவர்களைப் போலவே தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது அதை தடுக்க பெரிய நடிகர்கள் முன்வர வேண்டும் என்று நடிகை ஷனம் ஷெட்டியும் மத்திய அரசு இதற்கு என்று ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றும் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும் நடிகை ரஞ்சனி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ரஜினி அளவுக்கு அப்பாவியாக இல்லாமல் சிலவற்றைப் பேசி இருக்கிறார் அர்ஜுன். அவர் இது பற்றிப் பேசும் போது ஒருவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அது நீதிமன்றம் மூலம் தான் கிடைக்கும். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இப்படி இருவர் புகார் சொல்லும் போது அதை நம்புவதா? அல்லது நம்ப கூடாதா என்று எதுவுமே புரியவில்லை. அப்பாவி பெண்கள் நிறைய உள்ளனர். தவறாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். எது உண்மை என எனக்குத் தெரியாது என்கிறார்.
ஆனால், ரஜினி அளவுக்கு அப்பாவியாக இல்லாமல் சிலவற்றைப் பேசி இருக்கிறார் அர்ஜுன். அவர் இது பற்றிப் பேசும் போது ஒருவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அது நீதிமன்றம் மூலம் தான் கிடைக்கும். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இப்படி இருவர் புகார் சொல்லும் போது அதை நம்புவதா? அல்லது நம்ம கூடாது என்று எதுவுமே புரியவில்லை. அப்பாவி பெண்கள் நிறைய உள்ளனர். தவறாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். எது உண்மை என எனக்குத் தெரியாது என்கிறார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான உடன் 'அம்மா’ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சில நாட்களாக மவுனம் காத்து வந்த மம்முட்டி ,ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன் என்றும் அதன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வாய் திறந்து கருத்துச் சொல்லி இருக்கிறார். மலையாள சினிமா விவகாரம் பற்றி பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், யாராவது அப்படி நடந்து கொண்டால் உடனடியாக அவர்களை நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிவிட்டு, அதற்காக ஒரு குழுவை உருவாக்க இருக்கிறோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். கூடவே அமலாபாலுக்கு நடந்த சம்பவம் பற்றியும் அதற்கு தங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை பற்றியும் அவர் விளக்கி இருக்கிறார். அவர் மீது வைக்கப்பட்ட ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டை அவர் காமெடியாக கடந்து போனார்.
இதே விவகாரம் பற்றி பேசிய ஜீவா, மலையாள சினிமாவை போல தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாலியல் பிரச்சினை இல்லை என சொன்னது சர்ச்சையாகி உள்ளது. இதற்குப் பாடகி சின்மயி அவரது எக்ஸ் தளத்தில் தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதில் ரஜினி, கமல், அஜித், விஜய். தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேபதுபதி போன்ற பெரிய நடிகர்கள் வாய்ஸ் கொடுக்கவில்லை. மவுனமாக இருக்கிறார்கள் என்று நடிகை ராதிகா உட்படப் பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இவர்களே இத்தனை வருடங்களாகப் போராடி வரும் சக நடிகை, பாடகி பற்றி வாய் திறக்காமலிருந்தார்கள் என்பதுதான் பெரிய கொடுமை.
அடுத்து பெரிய நடிகர்கள் இருக்கட்டும், நயன்தாரா, த்ரிஷா போன்ற உச்ச நடிகைகளே மவுனம்தான் காக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் கூட பொதுவாகப் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல் பற்றியும் தன் மீது நடந்த சீண்டல் பற்றியும் பேசினாரே ஒழியக் கேரள சினிமாவில் நடந்த அநீதியைக் பகிரங்கமாக கண்டிக்கவில்லை. அஜித் கூட சினிமா உலகத்தைவிட்டு ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கிறார். எது குறித்தும் அவர் பேசுவதில்லை.
ஆனால், அரசியல் கட்சியாக மக்களுக்குச் சேவை செய்கிறோம், பாதுகாப்பு அளிக்கப் போகிறோம் என்று சொல்லும் விஜய், கமல் ஆகிய இருவர்களாவது அறிக்கை விடலாம் இல்லையா என்கிறார்கள் நடிகர்கள் சங்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் நடிகர்கள் சிலர். அந்தக் குரலுக்கு உரியவர்கள்தான் பதில் தர வேண்டும். தருவார்களா?












Click it and Unblock the Notifications