சித்ராவை சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்
சென்னை: சொந்த மகள் போல்தான் சித்ராவை நாங்கள் நினைத்தோம் என ஹேம்நாத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

போலீஸ் நடவடிக்கை
அதற்கு முன்னதாக தனது மகளை ஹேம்நாத் அடித்து கொன்று விட்டார். என் மகள் அது போல் தவறான முடிவை எடுக்கும் கோழையல்ல, வேறு யாராவது இப்படி செய்தாலே சித்ரா அறிவுரை சொல்வார். ஹேம்நாத் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொல்லப்படவில்லை
இதையேதான் சித்ராவின் நண்பர்களும், சக நடிகர்களும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சித்ரா கொல்லப்படவில்லை என்றும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது முகத்தில் உள்ள நகக் கீறல் அவருடையதுதான் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு தூண்டலா
எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன், அதற்கு யாராவது அவரை தூண்டினார்களா என்பது போன்ற கோணங்களில் போலீஸார் ஹேம்நாத் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹேம்நாத்தின் பெற்றோர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்கள்.

சொந்த மகள்
இதுகுறித்து ஹேம்நாத்தின் பெற்றோர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் சித்ராவின் இழப்பு பெரிய இழப்பு. அவர் ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை. ஆனால் எங்கள் மகன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. ஹேம்நாத் மீது மொத்த பழியையும் சுமத்துகிறார்கள்.

மோசம் இல்லை
சித்ராவின் இறப்பிறகு என் மகன் காரணம் இல்லை. சித்ராவை நாங்கள் சொந்த மகள் போல்தான் நடத்தினோம். அவர்களிடம் எந்த வரதட்சிணையையும் நாங்கள் கேட்கவில்லை. மருமகளாக வந்தால் போதும் என கூறினோம். ஹேம்நாத் எப்போதாவது குடிப்பது உண்டு. ஆனால் கொலை செய்யும் அளவுக்கு மோசமானவன் இல்லை என ஹேம்நாத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications