சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலி.. விவரம் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்பது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள், மருத்துவமனையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.

Here is the details of Chennai hospital bed

இந்த நிலையில் இந்த தட்டுப்பாடு படிப்படியாக போக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் படுக்கை, மருத்துவமனை படுக்கை உள்ளிட்டவை குறித்து அறிய வார் ரூம் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசின் இணையதளத்திலும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரபடி சென்னையில் 8138 ஆக இருந்த ஆக்ஸிஜன் படுக்கைகள் தற்போது 8.539 ஆக உயர்ந்துள்ளது. இது 3 சதவீதம் அதிகம்.

ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்

அது போல் தீவிர சிகிச்சை பிரிவில் மொத்தம் 2128 இல் 18 படுக்கைகள் காலியாக உள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கண் மருத்துவ நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனை, தண்டையார்பேட்டை சிடிஎச் மருத்துவமனை, பெரம்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு tncovidbeds.tnega.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
Here is the details of Chennai hospital bed and oxygen beds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X