ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயரை நீக்குவது எப்படி? இதோ விவரங்கள்!
சென்னை: உங்கள் வீட்டில் குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால் ரேஷன் கார்டிலிருந்து அவரது பெயரை எப்படி நீக்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் ஒருவரது பெயரை சேர்ப்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் ஆன்லைனிலேயே உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே செய்யலாம். வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை.
ரேஷன் கார்டுகள் மாநில அரசுகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். இந்த அட்டைக்கு மானிய விலையில் உணவு தானியங்களை மாநில அரசு வழங்கி வருகிறது. பலர் இதை பொதுவான அடையாள அட்டையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் இருக்கும். அதன் கீழே அவருடைய மனைவி, குழந்தைகளின் பெயர்கள் இருக்கும்.
ஒருவேளை மகன், மகளுக்கு திருமணமாகவிட்டால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு புதிய கார்டில் சேர்க்கப்படும். அதாவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் இருவரின் பெயர்களை இணைத்து குடும்ப அட்டையை பெறலாம்.
இந்த நிலையில் யாருடைய பெயரையாவது மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஒருவரது பெயரை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் யாராவது திருமணமாகி சென்றுவிட்டாலும் ரேஷன் கார்டில் பெயரை நீக்கிவிடுவார்கள். இல்லாவிட்டால் ஒருவர் இறந்துவிட்டாலும் அவரது பெயர் நீக்கப்படும்.
இதற்கு முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான், உறுப்பினரின் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் குறித்து தகவலை தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் இணையதளத்தில் இணைக்க வேண்டும். உதாரணமாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் உங்களுக்கு ஒரு ரெஜிஸ்டர் எண் கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பதை கேட்க வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்ட்டில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் செய்யப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க வேண்டும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications