ஏன் இங்கே நடப்பதை "அங்கே" டெலிகாஸ்ட் செய்ய போறீங்களானு கேட்ட மாஜி அமைச்சர்?.. கொந்தளித்த மைத்ரேயன்?
சென்னை: அதிமுக மூத்த நிர்வாகி மைத்ரேயன் மீது அவதூறு பரப்பும் வகையில் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பியதாகவும் அதனால் கோபமடைந்து மைத்ரேயன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜெயலலிதா இறந்த பிறகு ஒரு முறை கூடியது. அப்போது சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலாவை நீக்குவதற்கு ஒரு முறை பொதுக் குழு கூட்டப்பட்டது.
இந்த இரு முறையும் அவைத் தலைவர் மதுசூதனன் கூட்டினார். அவர் இறந்த பிறகு அவைத் தலைவர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட பொதுக் குழு கூட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

நியமனம்
இவர் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை இன்று ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ
கடந்த முறை ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னாள் எம்எல்ஏ ஒருவர் செல்போனில் சசிகலாவுக்கு கால் போட்டு லைவ் டெலிகாஸ்ட் செய்ததாக கூறப்படுகிறது. இது அதிமுக தலைமைக்கு தெரிந்துவிட்டது. இதனால் இந்த முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடப்பதை யாரும் சசிகலாவிடம் சொல்லாமல் இருப்பதற்காக செல்போனை உள்ளே கொண்டு வரக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

ஓபிஎஸ் - எடப்பாடி
அதன்படி ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் செல்போனை உள்ளே கொண்டு செல்லாமல் வெளியே ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் மைத்ரேயன் மட்டும் செல்போனுடன்தான் செல்வேன் என அடம்பிடித்ததாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

மூத்த நிர்வாகி
இந்த விவகாரம் ஓபிஎஸ், ஈபிஎஸ், உள்ளிட்டோரின் காதுகளை எட்டியது. அவர்கள் வந்து மைத்ரேயனை சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகவில்லையாம். அப்போது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியுடன் வந்த முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான ஒருவர் , " நாங்கள் எல்லாரும் போனை வெளியே வச்சுட்டுதானே உள்ளே செல்கிறோம்.

மைத்ரேயன் அதிர்ச்சி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட போனை எடுத்துச் செல்லவில்லை. நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை மீறினால் எப்படி என கேட்டதோடு கோபத்தில், "ஏன் செல்போனை உள்ளே கொண்டு வந்து அப்படியே இங்கு நடப்பதை சசிகலாவுக்கு தெரிவிக்க போகிறீர்களா என கேட்டுவிட்டாராம். இது மைத்ரேயனை அதிர்ச்சிக்குள்ளாகியது. கட்சிக்காக பாடுபடும் தன்னை ஸ்லீப்பர் செல் போல விமர்சிக்கிறார்களே, அதையும் தலைமை பார்த்துக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தால்தான் மைத்ரேயன் வெளியே சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications