பைலட்டே இல்லை! அமெரிக்கா மீது பறந்த மர்ம "யுஎப்ஓ".. ஏலியன் விமானமா? அது கிடைச்சா உண்மை தெரிஞ்சிடும்
ஒரு வருட ஆராய்ச்சி முடியில், 144 யுஎப்ஓ விமானங்களில் ஒன்றை தவிர மற்ற எதை பற்றியும் விளக்கம் அளிக்க முடியாது. இது என்னவென்றே தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியது.
சென்னை: அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த மர்மப்பொருள் என்னவென்று தெரியாத காரணத்தால், அது ஏலியனின் வாகனமாக இருக்குமோ என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.
நாம் பல ஹாலிவுட் படங்களில் கூட இது போன்ற விமானங்களை பார்த்து இருக்கிறோம். அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தட்டுகள்
இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.

ஏற்றுக்கொண்டது
இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது. காங்கிரஸ் அவை இந்த குழுவிடம் யுஎஃப்ஓ குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பென்டகன் உருவாக்கிய குழுவின் இந்த யுஎப்ஓ ரிப்போர்ட் தற்போது வெளியானது. ஒரு வருட ஆராய்ச்சி முடியில், 144 யுஎப்ஓ விமானங்களில் ஒன்றை தவிர மற்ற எதை பற்றியும் விளக்கம் அளிக்க முடியாது. இது என்னவென்றே தெரியவில்லை. இந்த யுஎப்ஓ குறித்த போதிய டேட்டா இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளது.

என்ன நடந்தது?
அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் அது ஏலியன் விமானமாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த ஒரு விமானம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். யுஎப்ஓ என்பதற்காக இதை ஏலியன் விமானம் என்று அழைக்க வேண்டியது இல்லை. ஆனால் இந்த விமானம் குறித்து எந்த அடிப்படை தகவலும் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளதால் இது ஏலியனின் யுஎப்ஓ ஆக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலைதான் அந்த யுஎப்ஓ விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

அலாஸ்கா
அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த பறக்கும் பொருள் யாருக்கு சொந்தமானது என்று தெரியவில்லை. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த பொருள் இருந்தது. இது எங்கே இருந்து பறக்க தொடங்கியது என்பது தெரியவில்லை. இதை அமெரிக்க அதிபர் பிடன்தான் சுட்டு வீழ்த்த சொன்னார் என்று பென்டகன் தெரிவித்து உள்ளது.

சின்னது
இந்த பொருள் மிகவும் சின்னதாக இருந்ததாகவும். இதில் பைலட் இல்லை. இந்த விமானத்தை திசை மாற்றுவதற்கான பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அது வெறுமனே வானில் பறந்து இருக்கிறது. பயணிகள் விமானம் பறக்கும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேலாக 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து உள்ளது. இடை இடையே கொஞ்சம் உயரம் குறைவாகவும் பறந்து உள்ளது. இதனால் பயணிகள் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதன் பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது.

சந்தேகம் தீரும்
சுட்டு வீழ்த்தப்பட்ட பொருட்களை மீட்ட பின் பின்வரும் சந்தேகங்கள் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைலட் இல்லாமல் இது எப்படி பறந்தது?
இது எந்த நாட்டிற்கு சொந்தமானது?
ஏலியன் விமானமா இது?
எதற்காக பறந்தது?
என்பது போன்ற கேள்விகள் அனைத்திற்கும் இதன் மூலம் பதில் கிடைக்கும்.

சீன பலூன்
சமீபத்தில்தான் சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது. சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கை அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications