பெண்ணை தாக்கிய வழக்கு.. முன் ஜாமின் கொடுத்த ஹைகோர்ட்.. ஜெய் ஸ்ரீராம் சொன்ன அமர்பிரசாத் ரெட்டி
சென்னை: பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமின் கிடைத்த அடுத்த நொடியே தனது தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டுள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த மாதம் 19ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது அமர் பிரசாத் ரெட்டியிடம் பிரதமர் வருகையின்போது ஆட்களை அழைத்து வருவதற்காக நீங்கள் பணம் வாங்கி வந்து விட்டதாகவும், அதில் எங்களுக்கு பங்கு வேண்டும் எனவும் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்தனர். தொடர்ச்சியாக தாக்கிய போது தேவியின் மண்டை உடைந்து உடனடியாக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், 2 நாட்கள் வெளியே வருவதற்கு பயமாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் உங்கள் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் என ஸ்ரீதர் மிரட்டி உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி கூறியதாக அவரது ஓட்டுநர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெண் பாஜக நிர்வாகி மற்றும் சகோதரியை தாக்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில், அமர் பிரசாத் ரெட்டி, அவரது ஓட்டுநர் ஸ்ரீதர், பா.ஜ.க நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது கோட்டூர்புரம் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்தனர்.
இந்த நிலையில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைத்து அமர் பிரசாத் ரெட்டியை தேடி வந்தனர்.
இதனிடையே பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன் ஜாமின் கோரி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. தனிப்படை போலீசார் அமர்பிரசாத் ரெட்டியை தேடி வந்த நிலையில் அவருக்கு இன்றைய தினம் நிபந்தனை ஜாமின் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 10 நாட்கள் அமர்பிரசாத் ரெட்டி கையெழுத்து போட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கிடைத்ததாக செய்தி வெளியான அடுத்த நிமிடமே அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். மலைப்பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்வது போன்ற புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications