எந்த மொழியில் கேட்கிறார்களோ அதே மொழியில் பதில் அனுப்பவும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில், ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியாவில் பதில் அளிக்கும் சட்ட விரோதமான நடைமுறை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

என்ன பிரச்சினை
மத்திய ரிசர்வ் படையிலுள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா 1 இடமும் இருந்தன. தமிழ்நாட்டில் ஒறு மையம் கூட அந்த பட்டியலில் இல்லை. இது குறித்து உள்துறை இணை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்தியில் பதில் கடிதம் எழுதியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்தி அலுவல் மொழி இல்லை
இது தொடர்பாக சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என 1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 தெளிவாகக் கூறுகிறது. இன்று வரை தமிழ்நாடு அரசு இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளது. இதற்கான சட்டமும் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. இருந்தாலும்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிகளின் கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிக்கும் முறை தொடர்ந்து நடைபெறுகிறது.. இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியுள்ள உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்பதை வலியுறுத்தி என்று அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசும், அதன் அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. செய்தியாக இருந்தாலும் சரி, விளக்கமாக இருந்தாலும் சரி, அதனைத் தாய்மொழியில் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications