திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழா.. தர்கா நிர்வாகம் தொடர்ந்த வழக்கு.. மதுரை ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை சிக்கந்தர் தர்கா நிர்வாகம் நடத்துகிறது.

விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும்.
இந்த விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
சட்டம் - ஒழுங்கை காவல்துறை நிலைநாட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜனவரி 20 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதி இடைக்கால உத்தரவே பிறப்பித்துள்ளார் என்றும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறியும் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications