Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவரிங் கோல்டு நகைகளுக்கு ஏறிய மவுசு.. தங்கத்தை கஜானாவில் குவிக்கும் நாடுகள்! தடுமாறும் தங்கம் விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு எதிர்பாராத விதமாக வட்டி விகித உயர்வுக்கு சாதகமாக மாறினாலோ அல்லது அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வலுவாக இருந்தாலோ, தங்கத்தின் விலை கணிசமாகக் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ANZ வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? எப்போதுதான் தங்கம் விலை குறையும் என்பது குறித்து நிபுணர்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரே நாளில் நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாய் அதிகரித்து, 97,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட லட்சம் ரூபாயை 1 சவரன் தங்கம் எட்டிவிடும் என்கிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால், அன்றைய தினம் தங்கம் பவுன் ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gold price Gold Jewelry Prices Investment tips

இதில் ஒரே ஆறுதல் வெள்ளி விலை மட்டுமே.. நேற்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.203க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து, பார்வெள்ளி 2 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விலையும் உச்சத்தை எட்டி வருகின்றன..

தங்க நகைகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.. இதெல்லாம்தான், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்த தங்கம் விலை எப்போது குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தவகையில், பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் தங்கம் விலை குறித்து கூறும்போது, "ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டுமே முக்கிய காரணியாக இருக்கிறது.

தங்கத்தின் விலை

வெறும் ஆபரணமாக தங்கம் இருந்தபோது ஒரு மதிப்பும், முதலீட்டு பொருளாக மாறியதுமே மற்றொரு மதிப்புமாக தங்கம் உள்ளது.. உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிவிட்டதால், தங்கத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில், ஒவ்வொரு வருடமும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 வருடத்தில், 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர்...

கஜானாவில் குவியும் தங்கம்

ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கமும் நேரடியாக கஜானாவுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்புள்ள நேரத்தில், கஜானாவிலும் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. இதைத்தவிர, பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்தே தங்கம் விலை உயர்ந்துள்ளது.

GST குறைந்ததுமே அதுசார்ந்த பொருட்களை மக்கள் வாங்கி சென்றதை போல தங்கத்தையும் வாங்குவார்கள்... ஆனால், தங்கத்துக்கான ஆதரவு மொத்தமாக இல்லாமல் போகும் என்ற நிலைமை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு" என்றார்.

டாலர் மதிப்பு வீழ்ச்சி?

அதேபோல தங்கம் விலை ஏன் உயர்ந்துள்ளது என்பது குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பன் சொல்லும்போது, டாலர் மதிப்பு குறைந்துள்ளதால், அதிக டாலர் கொடுத்து, தங்கத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் மட்டுமே 10 சதவீதம் தங்கம் உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பு வீழ்ச்சி அடையலாம் என்ற அபாயம் இருப்பதால், தங்களிடமுள்ள அன்னிய செலாவணி கையிருப்பில், ஒரு பகுதியை பல நாடுகளும் தங்கமாக மாற்றி வருகின்றன. சீனா மட்டும் கடந்த 9 மாதங்களில் வாங்கி குவித்துள்ள தங்கத்தின் மதிப்பு மிக அதிகம். சர்வதேச முதலீட்டாளர்களும் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

கவரிங் நகைகள்

இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள், தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.. தமிழகத்தின் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகை கடைகளில் நெக்லஸ், வளையல், பேன்சி கொலுசுகள் உள்ளிட்டவைகளை பெண்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர். நகைக்கடைகள் பெரும்பாலும் காலியாக உள்ளதுடன், பேன்சி ஸ்டோர்களில் பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+