சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ரூபா தானா? ரொம்ப கம்மி.. புதிய தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்க -ஹைகோர்ட் ஆர்டர்

Google Oneindia Tamil News

சென்னை: சினிமா திரையரங்குகளில் வாகன பார்க்கிங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கட்டணங்களை மறு நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் இருக்கும் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் திரையரங்க உரிமையாளர்களால் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ம் மூன்று மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20 ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

 ரூ25 ஆயிரத்துக்கு கைரேகை மாற்று அறுவை சிகிச்சை.. குவைத் விசா பெற நடந்த மோசடி.. பரபர பின்னணி தகவல்! ரூ25 ஆயிரத்துக்கு கைரேகை மாற்று அறுவை சிகிச்சை.. குவைத் விசா பெற நடந்த மோசடி.. பரபர பின்னணி தகவல்!

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால், தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட திரையரங்குகள் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த உத்தரவை ரத்து செய்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்கக்கோரி திரையரங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

திரையரங்கம் மனு

திரையரங்கம் மனு

சென்னை சென்டிரல் ரயில் நிலையம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 முதல் ரூ.50 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சென்னை விமான நிலையத்தில் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் திரையரங்க நிர்வாகம் சுட்டிக்காட்டி இருந்தது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இவற்றை கருத்தில்கொள்ளாமல் திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மிகக்குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

குறைவான கட்டணம்

குறைவான கட்டணம்

வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் அமைந்து இருக்கும் திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பார்க்கிங் கட்டண நிர்ணய உத்தரவை அவர் ரத்து செய்த அவர், புதிய பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

உயரும் வாய்ப்பு

உயரும் வாய்ப்பு

திரையரங்குகளில் சினிமா கட்டணம், இண்டெர்வெல் நேரத்தில் விற்கப்படும் பாப் கார்ன், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றின் கட்டணம் எம்.ஆர்.பியை விட அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் சென்று சினிமா பார்ப்பதை நடுத்தர மக்கள் தவிர்த்து வரும் நிலையில் பார்க்கிங் கட்டணமும் உயர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Highcourt order TN govt to Fix new parking price for Chennai theatres:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X