மொத்தமாக மாறுகிறது டாஸ்மாக்.. சத்தமே இல்லாமல் நடக்கும் அதிரடி.. இதை பாருங்க.. இனி வாலாட்ட முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இந்த கடைகள் தமிழ்நாடு முழுக்க மூடப்பட்டன. இந்த கடைகளை மூடுவதற்கு முன் அதற்காக லிஸ்ட் எடுக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகள் லிஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த கடைகளை கண்டறியும் பணி நடத்தப்பட்டது.

Highly major announcement from Tamil Nadu government for the first time in Tasmac

மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்தனர். பள்ளிகளுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக், கோவில்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் என்று பல்வேறு டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டன. இதற்கான லிஸ்ட் முதல்வர் ஸ்டாலினிடம் அனுப்பப்பட்டது.

டாஸ்மாக் மூடல்: அந்த லிஸ்ட் உறுதியான நிலையில் அது முதல்வர் ஸ்டாலினிடம் அனுப்பப்பட்டது. இதை உறுதி செய்த பின் சமீபத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. கண்ணாடி பாட்டில்களை விட டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்றால் செலவு குறைவு என்பதால், அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கர்நாடகாவில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது.

அதிரடி மாற்றங்கள்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட காலி பாட்டில் வாங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் தெரிவித்தது.

கண்மூடித்தனமாக கொட்டுவது மற்றும் காலி பாட்டில்களை உடைப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், காலி பாட்டில் வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

என்ன மாற்றம்: இந்த நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடைகளை எண்டு - டூ - எண்டு என்க்ரிப்ஷன் கொண்ட கடைகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். முழுக்க முழுக்க கேஷ்லெஸ் கடைகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அதாவது டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை தவிர்க்கும் விதமாக இந்த முறையை கொண்டு வர உள்ளனர். இதற்காக எம்ஆர்பி முறையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி எம்ஆர்பி எவ்வளவு உள்ளதோ அதை யுபிஐ மூலம் கொடுக்க முடியும். உதாரணமாக 100 ரூபாய்க்கு மது வாங்கினால், மதுக்கடையில் உள்ள யுபிஐ க்யு ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதை வைத்து பணத்தை கொடுக்க முடியும்.

இதனால் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொடுக்க வேண்டியதே இல்லை என்ற நிலை ஏற்படும். அதேபோல் விரைவில் 4ஜி முறையில் இயங்கும் கார்ட் ஸ்வைப்பிங் மெஷின் கொண்டு வரப்படும். இதையும் பயன்படுத்தி எளிதாக மது வாங்க முடியும். இதன் மூலம் வரும் நாட்களில் மதுக்கடைகளில் மொத்தமாக முறைகேடுகள் தடுக்கப்படும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+