இந்தி படித்தால் அடிமை.. மத்திய அரசை விளாசி ‛‛வண்டு-முந்திரி பருப்பு’’ கதைக்கூறி எச்சரித்த வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து இந்தி மொழி வண்டு, தமிழ் மொழி முந்திரி பருப்பு என கதைக்கூறி இந்தியை எதிர்க்க வேண்டும் என உணர்ச்சி உரையாற்றினார்.

மேலும் ‛‛ஆங்கிலம் எங்களுக்கு அந்நிய தேசத்து மொழிதானே தவிர, அறிந்த மொழியாக உள்ளது. உள்நாட்டு மொழியாக இந்தி இருந்தாலும் அது அறியாத மொழி, அந்நிய மொழி, எங்களால் அணுக முடியாத மொழியாக உள்ளது. இந்தி படித்தால் ஊமையர்களாக, வாய்பேச முடியாதவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு வழி செய்கிறது'' என இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

இந்தி திணிப்பு குற்றச்சாட்டு

இந்தி திணிப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தி மொழிக்கான பரிந்துரை

இந்தி மொழிக்கான பரிந்துரை

இதற்கிடையே தான் சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 வைரமுத்து ஆர்ப்பாட்டம்

வைரமுத்து ஆர்ப்பாட்டம்

மேலும் தமிழ்நாடு அரசு இந்தி திணிப்புக்கு எதிராக தனித்தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து தலைமையில்,தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ் கூட்டமைப்பு இந்தி திணிப்புக்கு எதிராக இன்று (புதன்கிழமை) சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் 20க்கும் அதிகமான தமிழ் அமைப்புகள் பங்கேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தி படித்தால் அடிமை

இந்தி படித்தால் அடிமை

மத்திய அரசு மெல்ல மெல்ல இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. தற்போது தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆங்கிலம் அறிந்து மத்திய அரசு பணிகளில் உள்ளனர். இவர்கள் தமிழை ஒரு கண்ணாகவும், ஆங்கிலத்தை இன்னொரு கண்ணாகவும் தமிழர்கள் கொண்டுள்ளனர். தாய்மொழியான தமிழ் மொழியை வாழ்வுக்கானது என்றும், ஆங்கிலத்தை வசதிக்கானது என்றும் நினைக்கிறோம். வாழ்வுக்கான மொழி தாய் மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும், வசதியோடும் இருப்போம். தமிழையும், ஆங்கிலத்தையும் படித்தால். ஆனால் இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய்பேச முடியாதவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு வழி செய்கிறது. இதனை மறந்துவிடக்கூடாது.

இந்தி அணுக முடியாத மொழி

இந்தி அணுக முடியாத மொழி

பயிற்று மொழி இந்தி என்று வந்துவிட்டால் மெல்ல மெல்ல ஆங்கிலத்தை அகற்றிவிட பார்க்கிறார்கள். ஆங்கிலத்தை அகற்றுவது ஒன்றும் எளிதல்ல. ஏனென்றால் 200, 300 ஆண்டுகளாக ஆங்கிலத்தை இந்த தேசம் பயின்று வந்துள்ளது. ஆங்கிலம் எங்களுக்கு அந்நிய தேசத்து மொழிதானே தவிர, நாங்கள் அறியாத மொழியில்லை. அந்நிய தேசத்து மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் அது அறிந்த மொழியாக உள்ளது. உள்நாட்டு மொழிதான் இந்தி. இது அறியாத மொழி. அந்நிய மொழி. எங்களுக்கு அணுக முடியாத மொழி. ஆகவே தோழர்களே இந்த பரிந்துரைகள் நமக்கு வெற்றுரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம்தள்ளுவது நமது கடமையாக நினைக்கிறேன்.

இந்தி மொழி வண்டு; தமிழ் மொழி முந்திரி பருப்பு

இந்தி மொழி வண்டு; தமிழ் மொழி முந்திரி பருப்பு

சிலர் நினைக்கலாம். இது இந்தி தானே. இந்திய மொழிதானே. இதனை கற்றுக்கொள்வதில் என்ன தடை என பலபேர் கேட்கலாம். அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். இந்தியை மெல்ல நுழைய விட்டால் என்ன ஆகும் தெரியுமா?. மூட்டை நிறைய முந்திரி பருப்பு இருக்க 10 வண்டுகள் நுழைந்தால் என்ன ஆகும்?. அதேநிலை தான் உருவாகும். அதாவது மூட்டை நிறைய முந்திரிகள் இருந்தாலும் வண்டுகள் எண்ணிக்கை குறைவு என அலட்சியம் காட்டினால் அடுத்த 2 வாரங்களில் முந்திரி பருப்புகள் பருக்கைகளாக தான் இருக்கும். எங்களின் தாய்மொழியான தமிழ்மொழி முந்திரி. இந்தி மொழி வண்டு. முந்திரி பருப்பு மூட்டைக்குள் வண்டு நுழைந்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து கொள்ள வேண்டும்.

சாட்சிகள் கூறிய வைரமுத்து

சாட்சிகள் கூறிய வைரமுத்து

இதற்கு சாட்சி உள்ளதா எனக்கேட்டால் மராட்டிய மொழிக்குள் இந்தி நுழைந்தது. மராட்டிய மொழி தனது முகத்தையும், கலாச்சாரத்தையும் இழந்துள்ளது. தனித்துவத்தை இழந்துள்ளது. இது மெல்ல தேய்ந்து கொண்டிருக்கிறது. தேய்ந்தே போனதற்கு சில மொழிகள் சாட்சிகள் உள்ளன. போச்பூரி, மகத்தி, அவாதி, சாத்ரீ உள்ளிட்ட வடஇந்திய மொழிகள் மறைந்துள்ளன. இந்தி மொழி என்ன செய்யப்போகிறது என அனுமதித்தால் காலப்போக்கில் இந்த மொழிகள் என்ன ஆகின சிதைந்து, திரிந்து அழிந்துவிட்டன. இந்த மொழிகளின் இடத்தில் தற்போது இந்தி மொழி உட்கார்ந்து விட்டது. இந்த நிலை வேண்டாம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+