நீதிமன்றத்திற்கு மாரிதாஸ் வந்ததும்.. போலீஸ் வாகனத்தின் மீது பூக்கள் தூவி இந்து மக்கள் கட்சி ஆரவாரம்
சென்னை: யூடியூபர் மாரிதாஸை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது அவர் வந்த போலீஸ் வாகனத்தின மீது இந்து முன்னணியினர் பூக்களை தூவியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ் (43). இவர் சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இவர் தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ, விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்
இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரிதாஸ் வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரை போலீஸார் கடந்த 9ஆம் தேதி அவரை கைது செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாரிதாஸ் கைது
இந்த நிலையில் போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக 2020-இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இவர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

தமிழக ஆளுநர் ரவி
அவரது கைதை பாஜகவினர் கண்டித்தனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மாரிதாஸ் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து புகார் கூறியதாக தெரிகிறது.
Recommended Video

பூக்களை தூவிய இந்து மக்கள் கட்சி
இந்த நிலையில் போலி இமெயில் மூலம் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவரது வருகையை அறிந்து நீதிமன்ற வாயிலில் இந்து முன்னணி அமைப்பினர் குழுமியிருந்தனர். அவரை பார்த்ததும் பாரத் மாதா கி ஜே என முழங்கினர். அப்போது அவர் வந்த போலீஸ் வாகனத்திற்கு பூக்களையும் தூவியதால் பரபரப்பு எழுந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications