மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல.. பாடம் புகட்டுவோம்.. காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டம்!
சென்னை : ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தின் 233வது ஆதீனமாக 2021ம் ஆண்டு முதல் ஞானபிரகாச பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் செயல்பட்டு வந்தார். அவருக்கு உடல் நிலை சரியில்லாதால், மடத்தின் பணி செய்ய இயலாது என பொறுப்புகளை துறந்துள்ளார்.
இதையடுத்து, மடத்தை நிர்வகிக்க அறநிலையத்துறை சார்பில் பொறுப்பாளராக குமரக்கோட்டம், சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய மடாதிபதியை தேர்வு செய்யும் வரை அவர் பொறுப்பாளராக செயல்படுவார் என அறநிலையத்துறை சமீபத்தில் அறிவித்தது.

இந்து முன்னணி எதிர்ப்பு
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு புதிய மடாதிபதி நியமிக்கும் வரை, அறநிலையத்துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளர்த்ததிலும், தமிழ்ப் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியது.

அறமில்லாத துறை
தமிழகத்தில் கோயில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் எடுத்துக்கொள்ளும் தமிழக அரசு, கோயில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் நலன்களில் துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோயில்களை சீரமைப்பதில்லை. பராமரிப்பதில்லை. எண்ணெய் விளக்குகள் கூட ஏற்ற முடியாத பல்லாயிரம் கோயில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. அந்தக் கோயில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல், அலட்சியம் காட்டும் அறமில்லாத துறை ஆதீன மடங்களின் மீது தன் பார்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

பதவி விலகல்
காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233-வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியார் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினர் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கோடு திருச்சிற்றம்பல ஞான தேசிக பிரமாச்சாரியார் சுவாமிகளுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்த சூழலில், உடல் நலத்தை காரணங்காட்டி ஆதீனம் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற ஆசையோ
கோயில் சொத்துகள் கொள்ளைபோன போதும், ஆகமங்கள் மீறப்பட்ட போதும், கோயில்களே காணாமல் போன போதும் அமைதியாய் வேடிக்கை பார்த்த அறநிலையத் துறை, ஆதீனம் பதவி விலகி விட்டார் என காரணம் காட்டி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு வேக வேகமாக செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோயில்களை எல்லாம் காட்சி பொருளாக, வணிக நிறுவனமாக மாற்றியது போதாதா? ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற அறநிலையத் துறைக்கு ஆசையோ? உடனடியாக தொண்டை மண்டல ஆதினம் மடத்திலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.

இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள்
அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் அமைச்சரின் உறவினர்கள். ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது. இல்லையென்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறநிலையத் துறையின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிட சொல்ல வேண்டும். மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications