வீட்டு கடன் வாங்கறீங்களா? சொத்து அடமான கடன் பத்திரங்களில் மாற்றம் வருது? பதிவுத்துறையின் பலே திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பத்திரப்பதிவு மண்டலங்களில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு பத்திரப்பதிவு பணிகளை வேகப்படுத்த விரைவில் ஸ்டார் 3.0 டெக்னாலஜி' திட்டம் அமலாக்க திட்டமிட்டப்பட்டு வரும் சூழலில், சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது தொடர்பான பத்திரங்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில், சில நேரங்களில் சர்வர் தொடர்பாக புகார்கள் ஆங்காங்கே எழுகின்றன.. பதிவு பணிகளின்போது அதிக ஆவணங்கள், 30 ஆண்டிற்கு மேலான பத்திரங்கள் கையாளப்பட்டு வருகிறது. வில்லங்க சான்று, பத்திர நகல் பெறுவது அதிகமாகி வருகிறது. தற்போது பத்திரப்பதிவிற்கு ஸ்டார் 2.0 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

சொத்து பத்திரங்கள்
எனினும், பதிவு பணிகளை வேகப்படுத்த ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட 'கிளவுட் கம்யூட்டிங்' சாப்ட்வேர் தொழில் நுட்பம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, பதிவு பணிகள் இப்போதுள்ளதை காட்டிலும் வேகமாக எளிதாகவும் முடிக்க முடியும்.. பத்திரப்பதிவுகளும் அதிகமாகும்.
அதுமட்டுமல்லாமல், வீட்டில் இருந்த படி, ஆன்லைன் மூலமாக பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்ய முடியும். பதிவுக்கான ஆதார், போட்டோ பதிவுகளையும் பதிவு அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே அப்லோடு செய்து கொள்ளலாம்.
கால தாமதம், புரோக்கர் தலையீடு, போலி பத்திரங்கள், முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவியாகவும் இருப்பதுடன், நவீன சாப்ட்வேர் மூலமாக எந்த நேரத்திலும் சர்வர் முடங்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
சொத்து பரிமாற்ற ஆவணங்கள்
இப்படிப்பட்ட சூழலில், கடன் தொடர்பான அடமான பத்திரங்கள், நிறுவனங்கள் இடையிலான சொத்து பரிமாற்ற ஆவணங்கள் போன்றவற்றையும், ஆன்லைன் வழியே பதியும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உதாரணத்துக்கு வீட்டின் மீது கடன் வாங்குவோர், அது தொடர்பான அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்க நேரிடுகிறது.. இதற்கான அடமான பத்திரத்தை பதிவு செய்ய மற்றும் ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வர வேண்டியதில்லை.
பதிவுத்துறை முடிவு
எனினும் நேரில் சென்று பதிவு செய்வதிலேயே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, ஆன்லைன் வசதியை பயன்படுத்துவதில்லையாம்.. அதனால்தான், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வருவதை குறைப்பதற்காக ஆன்லைன் முறை பதிவை கட்டாயமாக்க பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாம்.
மேலும், ஸ்டார் 3.0 சாப்ட்வேரில் படிப்படியாக பத்திரங்களை முழுமையாக, ஆன்லைன் முறைக்கு மாற்ற பதிவுத்துறை முடிவு செய்திருப்பதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
வீட்டு கடன் - அடமான பத்திரங்கள்
சொத்து அடமானக் கடன் பத்திரங்கள் என்பது, சொத்து உரிமையாளர் (அடமானம் செய்பவர்) கடன் பெறுவதற்காக தனது சொத்தை பிணையமாக வைக்கும் ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். சொத்து விவரங்கள்: கடன் விண்ணப்பத்துடன், அடமானம் வைக்கப்படும் சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களில் சொத்து பத்திரம், பட்டா, வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீதுகள் போன்ற ஆவணங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications