விரைவில் அமித் ஷா டிஸ்சார்ஜ்.. எய்ம்ஸ்... மருத்துவ அறிக்கை வெளியீடு!!
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்து விட்டார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அமித் ஷா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலம் கோளாறு காரணமாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் அவரது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ் இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குணமடைந்து விட்டார். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் குருகிராமில் இருக்கும் மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அவருக்கு உடல் சோர்வு மற்றும் உடல் வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீடு செல்லும் வரை மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளை கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications