ஆணவக் கொலையை தடுக்க புதிய சட்டம்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: ஆணவக் கொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கேஎன் பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் படி தனிச்சட்டம் இயற்றப்படும் என்றும், ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியது. இந்த விவகாரத்தில் கவினை கொலை செய்த சுர்ஜித் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதையடுத்து அவரின் தந்தையும் காவல் அதிகாரியுமான சரவணன் மற்றும் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கவினின் குடும்பத்தினருக்கு திமுக, விசிக, நாதக உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதில் விசிக மட்டுமே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், கவின் ஆணவக் கொலை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் ஆணவக் கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், சமூகங்களின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன்.
எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது. அனைத்து விதமான ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.
சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டையும் வாளும், கேடயமுமாக முன்னெடுப்பட வேண்டும். சீர்திருத்தச் சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது. இடைக் காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது. சாதி வேற்றுமையானது. வேற்றுமை விதைக்கப்பட்டதும், ஒற்றுமைக்கான குரல்கள் தமிழ் மண்ணில் உரக்க எழுந்ததை காண்கிறோம்.
அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கி இருக்கிறோம். சமநீதி, சமூக நீதி உறுதிமொழி எடுத்தோம். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே குடாது என சமூகநீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம். ஆனால் சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது. ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணம் இல்லை.. எதற்காக நடந்தாலும் கொலை, கொலைதான்.
ஆணவப் படுகொலையை தடுக்க வேண்டும் என்று சபையில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவப் படுகொலையில் ஈடுபடுபவர்கள் எதன் பொருட்டும் தப்பிவிடக் கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல் ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.
இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications