Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் ஓவர்.. சென்ட்ரலுக்கு மாற்று வருகிறது.. பெரம்பூரில் 340 கோடியில் 4வது ரயில் முனையம்..விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு இறுதியில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலைய்ல பெரம்பூரில் ரூ.340 கோடி மதிப்பில் 4-வது ரயில் முனையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், விரைவில் பணிகள் தொடங்கும் என நம்பப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அண்டை மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதி மாவட்டத்தை சென்னை விழுங்கிவிட்டது. இதன் காரணமாக சென்னையில் மக்கள் நெருக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது . தற்போது சென்னை மாநகரத்தின் மக்கள் அடர்ந்தி என்பத செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலும், ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரையிலும், திருவள்ளூர் முதல் ஆவடி வரையிலும், திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் வரையிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

Hope to get approval soon and start work on Chennai s 4th railway terminal in Perambur

தற்போதைய நிலையில் சென்னையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பெரும்பாலும் எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்தும், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் புறப்பட்டு சென்று வருகின்றன. இந்த ரயில் நிலையங்கள், பெட்டிகள் பராமரிப்பு வசதியுடன் செயல்படுவதால் ரயில் முனையமாக இருக்கின்றன. கோவையில் சின்ன பொய்யில் 70 லட்சம் சம்பாதித்த தம்பதி.. பாலாய் போன பால் வியாபாரி.. பக்கா ஸ்கெட்ச்

எழும்பூருக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தாம்பரம் வெற்றிகரமாக இயங்கும் நிலையில், சென்ட்ரலுக்கு மாற்ற மேற்கு வழித்தடத்தில் ரயில் முனையம் உருவாக்க ரயில்வே அமைச்சகம் விரும்பியது. ஏனெனில் சென்ட்ரல் வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. தினசரி சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். எனவே கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டது.

முதலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட் கோட்டார்ஸில் உள்ள இடத்தைப் பயன்படுத்த ஆய்வு நடத்தியது தெற்கு ரயில்வே. ஆனால் ஆய்வில் அந்த இடம் ஏற்கப்படவில்லை. அடுத்தாக வில்லிவாக்கத்தில் அமைக்கலாம் என அதிகாரிகள் திட்டமிட்டார்கள். ஆனால் அது சரியான இடவசதியை உருவாக்குவது சவாலாக இருந்தது.

இதற்கிடையில் சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பரில் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் அனுமதியும் அளித்தது. இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தை 4-வது முனையமாக மாற்றுவதற்காக ரூ.340 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதவிர பெரம்பூர் - அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5, 6-வது புதிய பாதைகள் ரூ.182 கோடியில் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.. இதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியத்திடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செயல்முறை தொடங்கி இருந்தது. இப்போது அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை பிறந்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை பெரம்பூரில் ரயில்வே முனையம் அமைக்க போதிய நிலம் இருக்கிறது. எனவே இங்கு ரூ.340 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி இருக்கிறோம். ரயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்த வசதி, வணிக வளாகப் பகுதிகள், சுற்றுச் சுவர்கள், மேம்படுத்தப்படும் நுழைவாயில்கள் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்பி உள்ளோம்.

இதைத்தொடர்ந்து, ரயில்வே வாரியத்திடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செயல்முறை நடந்தது. இப்போது அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைத்து, பணிகள் தொடங்கும் என நம்புகிறோம். பெரம்பூரில் தற்போது 4 நடைமேடைகள் உள்ளன. ரயில் முனையமாக மாறும்போது, கூடுதலாக 3 நடைமேடைகள் அமைக்கப்படும். 2 முதல் 3 ஆண்டுகளில் இந்த புதிய முனையத்தை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம் என்று அதிகாரி கூறினார். பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கு அகற்றப்பட்டுபராமரிப்பு உள்ளிட்ட வசதிகளுடன் முனையம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 200 ஏக்கரில் இந்த முனையம் இருக்கும் என கூறப்படுகிறது.

பெரம்பூர் ரயில் முனையம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பின்னர், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ரேணிகுண்டா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரயில்களுக்கு சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூர் ரயில் நிலையம், சென்னை சென்டரலில் இருந்து மிக அருகில் இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்கிறார்கள். தற்போதைய நிலையில் தாம்பரம் ரயில் முனையம் எழும்பூரில் இருந்து 26 கிமீ தூரத்தில் இருக்கிறது. பெரம்பூரில் இருந்து சென்ட்ரல் வெறும் 6 கிமீ அளவிற்கு தான் இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+