சென்னை அருகே கோர விபத்து! உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி! முதல்வர் அறிவிப்பு!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம்,எண்.69, மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (4-5-2023) மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை, ஆலந்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த திருமதி.காமாட்சி (வயது 80), திரு.கோவிந்தன் (வயது 60) திருமதி. அமுலு (வயது 50), திருமதி.சுகன்யா (வயது 28), குழந்தைகள் ஹரிபிரியா (வயது 8) மற்றும் கனிஷ்கா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ''

''உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications