சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமேல் கடன்! எவ்ளோ பெரிய ஹோட்டல்.. சரவணபவனுக்கு “சிக்கல்” - ரூ.40 கோடியாம் - சென்னை நிலம் “ஜப்தி”

Google Oneindia Tamil News

சென்னை: வங்கியில் கடனாக பெற்ற ரூ.25 கோடி பணத்தை செலுத்தாத காரணத்தால் பிரபல தனியார் உணவகமான சரவணபவனுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் ஜப்தி செய்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பிரபல சைவ உணவகங்களில் சரவணபவனுக்கு எப்போதும் ஒரு தனி பெயர் உண்டு. சென்னை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் சரவணபவன் உணவகத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்பேடு அருகே ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை ஓரம் சரவணபவன் நிறுவனத்துக்கு சொந்தமாக 7.5 கிரவுண்ட் நிலம் அமைந்து இருக்கிறது.

 இனி 5 இல்ல 4 தான்.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் மூவ்.. 'அஸ்திவாரமே’ - ஆடிப்போன ஓபிஎஸ் டீம்! இனி 5 இல்ல 4 தான்.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் மூவ்.. 'அஸ்திவாரமே’ - ஆடிப்போன ஓபிஎஸ் டீம்!

வங்கி கடன்

வங்கி கடன்

இந்த நிலத்தை வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுத்துறை வங்கியில் ரூ.25 கோடியை கடனாக பெற்றது சரவணபவன். பல ஆண்டுகளாகியும் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியையும் அசலையும் சரவணபவன் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

இதன் காரணமாக சரவணபவன் உணவகம் மீது பொதுத்துறை வங்கியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரவணபவன் உணவகம் வாங்கிய கடனை மீண்டும் செலுத்தாததால் அதற்க்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய சரவணபவன் நிர்வாகமும் இதுவரை வங்கியில் வட்டியும் செலுத்தாததால் தற்போது திருப்பி செலுத்த வேண்டிய தொகை ரூ.40 கோடி வரை அதிகரித்து இருக்கிறது. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஹோட்டலுக்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் அறிவித்துவிட்டு சென்றனர்.

நிலம் ஜப்தி

நிலம் ஜப்தி

ஆனாலும் ஹோட்டல் நிர்வாகம் வட்டியை செலுத்தாததால் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த வங்கி ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சரவண பவன் உணவகத்தின் இடத்திற்கு வந்தனர். அப்போது அந்த இடத்தை ஹோட்டல் நிர்வாகம் தனியாருக்கு வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

 வடமாநில தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்கள்

அந்த இடத்தில் வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை வெளியேற்றிய அதிகாரிகள் சரவணபவன் ஹோட்டல் இடத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்து அந்த இடத்தை மூடி சீல் வைத்து விட்டு சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Land near Chennai Koyembedu at EVR Periyar highway owned by Hotel Saravanabhavan seized by Bank officials after court order. The famous hotel got Rs.25 crore debt from the public sector bank and failed repay the debt and interest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X