வீட்டு வரி + குடிநீர் வரி.. கிராம ஊராட்சிகளுக்கான வரிகளை இனி ஆன்லைனில் செலுத்தலாம்.. சூப்பரான வசதி
சென்னை: ஊராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான வரி செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான சூப்பர் ஏற்பாடுகளையும் அரசு செய்து தந்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, அரசு அலுவலகங்கள் முழுவதுமே ஆன்லைன்மயமாக்கப்பட்டுள்ளன.. இதனால், பொதுமக்கள் தங்களின் தேவைகளை விரைவாக செய்துமுடிக்க முடிகிறது. அத்துடன், அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சத்தை ஓரளவு குறைக்க முடிகிறது.. இதில் இடைத்தரகர்களையும் நம்பியிருக்க தேவையில்லை..

எனினும், இன்னமும் கணினிப் பயன்பாடு 100 சதவீதத்தை எட்டவில்லை.. தமிழ்நாடு முழுவதும் 12,000-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்திவருகின்றன. இப்போது, நேரில் சென்று இந்த வரிகளை செலுத்தும் சூழலும் உள்ளது..
சொத்துவரி: இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததுடன், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில், கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கிராம ஊராட்சிகளுக்கான வரிகளை, ஆன்லைனில் செலுத்த வசதியாக, புதிய இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில், துவக்கி வைத்திருக்கிறார்.
கிராம ஊராட்சிகள்: கிராம ஊராட்சிகளுக்கு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரியில்லாத கட்டணங்களை, இணைய வழியில் செலுத்த, https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் இதற்காகவே பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யு.பி.ஐ., செயலி பயன்படுத்தி, எந்த நேரத்திலும் கட்டணம் செலுத்தலாம்.. இதன்காரணமாக, ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறைவும்.

ஊராட்சியில் பொது நிதி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், அரசு திட்டப்பணிகள் என, பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள, 11 வகையான கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதை எளிமைப்படுத்தும் விதமாக, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையும், இந்தியன் வங்கி ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சூப்பர் : இதுதொடர்பாக, தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கு திட்டத்தின், 'TNPASS' என்ற புது வெப்சைட்டினை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். தமிழக அரசின் இந்த ஏற்பாடுகள் எல்லாம், பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications