"எடப்பாடி ஐயா.. இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்க".. ராயல் சல்யூட் அடிக்கும் பெண்கள்..!
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிக்கைக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாலா பக்கம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. அதிலும் குடும்ப தலைவி முதல் வேலைக்கு போகும் பெண்கள் வரை ராயல் சல்யூட் அடித்து வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம், அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான்..!
தேர்தலை எதிர்கொள்ள அதிமுக முழுவீச்சில் இறங்கி உள்ளது.. ஆட்சியை தக்க வைக்கும் அனைத்து முனைப்புகளிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த 4 வருடஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எத்தனையோ நலத்திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளார்.. எத்தனையோ நன்மைகளுக்கு வித்திட்டுள்ளார்.. எத்தனையோஅறிவிப்புகளை வெளியிட்டு வயிற்றில் பால் வார்த்துள்ளார்.

தேர்தல் அறிக்கை
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன்மூலம் மக்களின் மனசில் இடம் பிடித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.. எனினும் பெண்கள் தரப்பில் அதிமுக அரசுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குடும்ப தலைவிகள்
அம்மா வாஷிங் மெஷின், குலவிளக்கு திட்டம், பஸ் பயணத்தில் 50% கட்டண சலுகை, சீர்வரிசை திட்டம் போன்ற பல்வேறு பெண்கள் நல திட்டங்கள் பாராட்டுக்களை பெருமளவில் பெற்று வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, குடும்ப தலைவிகளின் சுமையை பெருமளவு குறைத்திடும் வகையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தந்து உதவினார்.

ஜெயலலிதா
அம்மா கொடுத்த மிக்ஸி, கிரைண்டர்களை அனைத்து குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.. அம்மா வாஷிங்க் மெஷின், பேருந்து பயணங்களில் மகளிர்க்கு 50% கட்டண சலுகை, குல விளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

சுயஉதவிக்குழு
பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருட காலமாக உயர்த்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி. அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், புதுமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் மூலம் பட்டாடை, வெள்ளிக் கொலுசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு
இந்த தேர்தல் அறிக்கைக்குதான், பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அம்மா வாஷிங் மெஷின், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தனி மகளிர் வங்கி, அம்மா சீர் வரிசை, பஸ் பயணத்தில் கட்டண சலுகை ஆகியவை தங்களுக்கு அத்தியாவசிய தேவை என்றும், அதனை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைத்து தரப்பு பெண்களும் தெரிவிக்கின்றனர்.. அத்துடன் முதல்வருக்கும் தங்களுடைய நன்றிகளை உரித்தாக்கி கொண்டு வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications