சென்னையை உலுக்கிய 5 அர்ச்சகர்கள் மரணம்.. கடைசி 5 நிமிடத்தில் நடந்தது என்ன? வெளியான வீடியோ
சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், பெரிய விபரீதம் நடந்துள்ளது. சுவாமியை குளத்தில் இறக்கிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடைசி ஐந்துநிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. அந்த காட்சிகள் குறித்து பார்ப்போம்.
சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன் (23), வணேஷ் (20) உள்பட ஐந்துபேரின் உடல்கள் மீட்கப்பட்டு, ஐந்து உடல்களும் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்து நடந்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளம் பகுதியில் சென்னை மாநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் சேறு அதிகமாக இருந்துள்ளது.

குளத்தில் குளித்தனர்
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சர்கள் அனைவரும் சாமியை குளத்தில் குளிப்பாட்டினர். பின்னர் குளத்து நீரில் மூழ்கி எழுந்தனர். குளத்தில் மூழ்கி எழுந்திருக்கும் போது, மூன்று முறை எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருக்கும் போது மூன்றாவது முறை எழ முயன்ற போது ஒருவருக்கு கால் மாட்டியிருக்கிறது.

கால் சிக்கியது
அந்த அர்ச்சகரை மீட்க செல்லும் போது தான், அடுத்தடுத்து 4 பேர் நீரில் மூழ்கி உள்ளனர்.ஒட்டுமொத்தமாக நீரில் அடுத்தடுத்து ஐந்து அர்ச்சர்கள் தண்ணீரில் உள்ள சேரில் சிக்கி நீந்த முடியாமல் உயிரிழந்தனர். கடைசி ஐந்து நிமிடத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது. வீடியோவில் அர்ச்சகர்கள் குளத்தில் ஒருவருக்கு ஒருவர் கையை கோர்த்தபடி,தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கிறார்கள்.

ஐந்து பேர் உயிரிழப்பு
அப்போது ஒருவர் தண்ணீரில் மூழ்குகிறார். பின்னாலேயே சிலர் அவரை காப்பாற்ற முயலுகிறார்கள். அவர்களும் நீரில் மூழ்குகிறார்கள். சுற்றி இருந்த அர்ச்சகர்கள் என்ன நடக்கிறது என்பதை உணருவதற்கு உள்ளாகவே ஐந்து பேர் மூழ்கி விடுகிறார்கள்.அதன் பின்னர் உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து மீட்டுள்ளனர்.

இரண்டாவது முறை
இந்த சம்பவத்தால் பெரும் சோகம் அடைந்த பக்தர்கள் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் நேரில் வந்து முழு விசாரணையும் நடத்தினர். காலை 6.30 மணிக்கு இதேபோல் நீரில் மூழ்கி தீர்த்தவாரி நடந்துள்ளது. அப்போது பிரச்சனையாகவில்லை. ஆனால் காலை 9.30மணிக்கு தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications