"பறிபோன பார்வை.." மொபைல் பயன்பாட்டால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! மருத்துவர் பகிர்ந்த பகீர் சம்பவம்
மொபைல் போன் பயன்பாட்டால் பெண் ஒருவர் கிட்டதட்ட பார்வையையே இழந்துள்ளார்.
சென்னை: மொபைல் போனை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்துவது ஆபத்தைத் தரும் என்று தெரிந்தாலும் கூட பலரும் தொடர்ச்சியாக போனை பயன்படுத்தியே வருகிறோம். இதற்கிடையே இணையத்தில் எப்படி ஒரு பெண் மொபைல் பயன்பாட்டால் கண் பார்வையே இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்பதை மருத்துவர் விளக்கியுள்ளார்.
நாம் தினசரி வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே நமது உடலின் ஆரோக்கியம் இருக்கும்.. அதிலும் இந்த நவீன காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து நாம் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
மேலும், இந்த காலத்தில் போதை, சிகரெட் என்று உடல்நலனுக்குக் கெடு விளைவிக்கும் பல விஷயங்களும் இங்குக் கொட்டி கிடக்கிறது. இதனால் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் ஒருவருக்கும் கூட மிக எளிதாக மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படக் கூடும்.

உடல்நிலை பாதிப்பு
மது, சிகரெட் என்று இல்லை.. எந்த போதைக்கு அடிமையாகி இருந்தாலும் அது மோசமான ஆபத்தையே தரும்.. அப்படியில்லை என்றால் அது நமது உடலுக்குப் பேரழிவையே தரும்.. இது தொடர்பாக ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர். சுதிர் குமார் என்பவர் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.. இது நம்மை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் கூட, இத நவீன காலத்தில் நமது உடல்நிலை எந்தளவுக்குப் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பதை விளக்குவதாக இது அமைந்துள்ளது. எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாத இளம் பெண் ஒருவர் தனது தினசரி வாழ்க்கை முறையால் எப்படி பார்வையை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

ஹைதராபாத் பெண்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயது பெண் மஞ்சு... இவர் கடந்த 1.5 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இருளில் பல மணி நேரம் மொபைலை பயன்படுத்துவதைப் பழக்கமாகவே வைத்துள்ளார்.. இதற்கிடையே இப்போது அந்த பெண்ணின் பார்வை திறன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு முதலில் கண்ணில் அதிக ஒளியுடன் கூடிய ஃப்ளாஷ்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இருண்ட ஜிக்ஜாக் வடிவங்கள் தெரிந்துள்ளன. சில சமயம் கண் பார்வையிலேயே கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பல நேரங்களில் சில நொடிகளுக்கு அவருக்கு எதுவுமே கண்களுக்குத் தெரியாதாம்.

பிரச்சினை இல்லை
இது பெரும்பாலும் இரவில் அவள் டாய்லெட் செல்லும் போதே நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அவர் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவரது உடல்நிலை நார்மலாகவே இருந்துள்ளது. நரம்பியல் பிரச்சினை இருக்குமோ என்றும் சோதனை செய்யப்பட்டது. நரம்பியல் பாதிப்பு எதுவும் அவருக்கு இல்லை.. இதையடுத்து நான் அவரது மருத்துவ ரெக்கார்டை ஆய்வு செய்தேன். அவரது மாற்றுத்திறனாளி குழந்தையைப் பராமரிப்பதற்காக அழகுக்கலை நிபுணராக இருந்த அந்த பெண் வேலையை விட்டுள்ளார்.

மொபைல் பயன்பாடு
அதன் பிறகே அவருக்கு இந்த பிரச்சினை ஏற்படத் தொடங்கியுள்ளது. வீட்டில் இருக்கத் தொடங்கியவுடன் அந்த பெண், தினமும் பல மணிநேரம் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதைப் பழக்கமாக வைத்துள்ளார்.. இரவிலும் தினமும் இரண்டு மணிநேரம் மொபைலை பயன்படுத்துவாராம். அதுவும் லைட் எல்லாம் அணைக்கப்பட்ட பிறகும் கூட.. இதைத் தெரிந்து கொண்ட பிறகு அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம்
அந்த பெண்ணுக்கு ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் (SVS) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால் "கணினி விஷன் சிண்ட்ரோம்" (computer vision syndrome) என்று அழைக்கப்படும் பாதிப்பு ஏற்படும்.. இது நமது கண்களில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு நான் எந்த சிகிச்சையையும் அவருக்குத் தரவில்லை..

சிகிச்சை என்ன
பதற்றத்தில் இருந்த மஞ்சு தனது கண் சிகிச்சைக்கு மருந்து வேண்டும் என்று கேட்ட போதும் நான் எந்த மருந்தையும் அவருக்குத் தரவில்லை.. எதனால் இப்படிப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து அவருக்கு நான் விளக்கினேன்.. மேலும், ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறும் பரிந்துரைத்தேன்.. மஞ்சு முதலில் தனது மூளை நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதோ என்று அஞ்சினார்.. நான் விளக்கிய பிறகு என்ன பிரச்சினை என்பதை உணர்ந்து கொண்டார். நான் மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவே சொன்னேன்..

நார்மல் ஆகிவிட்டது
மொபைலை பொழுது போக்கிற்காகவே பயன்படுத்துவதாகவும் இதனால் முற்றிலும் அவசியமென்றால் தவிர, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டது.. மஞ்சு முற்றிலும் நன்றாக இருந்தார். 18 மாதங்களாக இருந்த அவரது பார்வைக் குறைபாடு பிரச்சினை நீங்கிவிட்டது. கண் பார்வை நார்மலாக உள்ளது. இப்போது அவரது கண்களில் ப்ளாஷ்கள் தெரிவதில்லை..

20-20-20 விதி
இரவில் சில நொடிகள் முற்றிலும் கண் தெரியாமல் போவதும் நின்றுவிட்டது. இதன் மூலம் எனது சந்தேகம் சரி என்று நிரூபணமானது. எனவே, மக்களே டிஜிட்டல் சாதனங்களின் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிருங்கள்.. ஏனெனில் இது கடுமையான பார்வை இழப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தும் போது 20-20-20 விதியை பின்பற்றுங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் 20 வினாடி பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.. 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளைப் பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications