லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள்.. வீட்டிலிருந்தபடியே சமாளிப்பது எப்படி.. பின்பற்ற வேண்டியவை என்ன?
சென்னை: ஒருவருக்கு லேசான கொரோனா பாதிப்புகள் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனாவை எளிதில் வெற்றி கொள்ளலாம்.
Recommended Video
இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் மூன்று லட்சத்தை நெருங்குகிறது.
வரும் காலங்களில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம் மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெறும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா பரவல்
அதாவது வரும் காலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.

கொரோனா அறிகுறிகள்
முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு, பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல், தொண்டை புண், இருமல், சுவாசிப்பதில் சிரமம், தலைவலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை முக்கிய கொரோனா அறிகுறிகளாக உள்ளன. சுற்றியுள்ளவர்களைக் காக்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் முறையாக மாஸ்க்குகளை அணிய வேண்டும்.

தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
கொரோனா உறுதி செய்யப்பட்டால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுங்கள். தினசரி 3- 4 முறை ஆக்சிமீட்டரில் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்யுங்கள். காற்றோட்டத்திற்கு ஜன்னல்களை திறந்து வைக்கலாம். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் காய்ச்சல் பராசிட்டமால், அசிடமினோபன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் .

ஆக்சிஜன் அளவு 92% மேல் இருந்தால்
நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யக் குப்புறப் படுத்து மூச்சுவிடுங்கள். அறிகுறிகள் மேம்படும் வரை budesonide (steroid) இரண்டு பஃப்ஸ் விகிதம் தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ளுங்கள். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் காய்ச்சல் பராசிட்டமால். அசிடமினோபன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் .

ஆக்சிஜன் அளவு 92%-க்கு கீழ் குறைந்தால்
உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். சிகிச்சையின் போது, நூரையீலுக்கு செல்லும் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப் படுத்து மூச்சுவிடுங்கள். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தலாம். மேலும், தினசரி 4 - 5 முறை ரத்த ஆக்சிஜன் அளவு செக் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் 5-10 நாட்களுக்கு Dexamethasone 6mg (steroid) மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் மருந்து கொரோனா அறிகுறிகளைக் குறைக்கலாம். ஆனால் உயிரிழப்பதற்கான அபாயத்தைக் குறைக்காது. மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும், ரத்த ஆக்சிஜன் அளவு குறையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும். டசிசுமாப் (Tacizumab) - மருத்துவமனையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர் மேற்பார்வையுடன் கொடுக்கப்பட வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications