தென்மாவட்ட அரசியலே மாறும்.. ஓபிஎஸ் + பாஜக + டிடிவி.. 6 தொகுதிகளில் ரிசல்ட்டை மாற்றும்.. மூவர் டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அவரை பாஜக மிக மோசமாக நடத்தியது. பாஜகவால்தான் டிடிவி தினகரன் ஜெயிலில் இருந்தார். அதிமுகவில் சசிகலா குடும்பமே இருக்க கூடாது என்று பாஜக இப்படி செய்தது. அதே பாஜகவுடன் டிடிவி தினகரன் போய் கூட்டணி வைத்துவிட்டார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விமர்சனம் வைத்துள்ளார்.

பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

How AMMK OPS BJP alliance will change lot of prospects in South Tamil Lok Sabha elections

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாக கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியாவிற்கு அவர் அளித்த பேட்டியில், பாமக என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்று தெரியவில்லை. பாமக - பாஜக - அதிமுக என்ற கூட்டணி உருவானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாமக, தேமுதிக எங்கே செல்வார்கள் என்பதில் குழப்பம் உள்ளது. பாஜக - அதிமுக சேர்ந்துவிடும், பெரிய கூட்டணி உருவாகும் என்று இவர்கள் நம்பினார்கள். அது நடக்கவில்லை.

இரண்டு கட்சிகளும் பாமக, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா இடம் கொடுக்க மாட்டோம் என்றுவிட்டனர். இரண்டு பக்கமும் பாமக, தேமுதிக டிமாண்ட் ஏற்ற பார்க்கிறார்கள். டிமாண்டை உயர்த்துவதற்காக மாறி மாறி இரண்டு பக்கமும் பேசி வருகிறார்கள். யார் ராஜ்ய சபா சீட் கொடுப்பார்கள் என்பதற்கான ஆலோசனைகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

ஆனால் இரண்டு கட்சிகளும் ராஜ்ய சபா கொடுப்பதை விரும்பாது. ஏனென்றால்.. கட்சிக்கு உள்ளேயே பலர் ராஜ்ய சபா பெற முயன்று வருவார்கள் . கட்சியின் சீனியர்கள் ராஜ்ய சபா பெற தீவிரமாக முயற்சிப்பார்கள். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அவரை பாஜக மிக மோசமாக நடத்தியது. பாஜகவால்தான் டிடிவி தினகரன் ஜெயிலில் இருந்தார்.

அதிமுகவில் சசிகலா குடும்பமே இருக்க கூடாது என்று பாஜக இப்படி செய்தது. அதே பாஜகவுடன் டிடிவி தினகரன் போய் கூட்டணி வைத்துவிட்டார். அவர் தவறு செய்துவிட்டார். பாஜக பவரில் இருக்கிறது என்பதால் டிடிவின் தினகரன் இறங்கி சென்று இருக்க கூடாது. அவரின் அரசியலுக்கே இது சிக்கல். எடப்பாடியை தோற்கடிக்க டிடிவி தினகரன் முயல வேண்டும்.

அதைவிட்டு பாஜகவுடன் சேர்ந்தால் அவருக்கு பெரிய பலன் கிடைக்காது. பாஜக கூட்டணியை தவிர்த்துவிட்டு டிடிவி தினகரன் வேறு வழியில் பணிகளை செய்து இருக்கலாம். பாஜக + ஒபிஎஸ் +டிடிவி சேர்ந்த காரணத்தால் தெற்கில் 6 தொகுதிகளில் முடிவுகள் மாறலாம். 6 தொகுதிகளில் தெற்கில் இவர்கள் நல்ல வாக்குகளை அள்ளுவார்கள். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. தெற்கில் இதனால் கடுமையான போட்டி இருக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விமர்சனம் வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+