"காவி" கனவு தகர்கிறது?.. "தலைவர்" போட்ட போடு.. உறைந்த அதிமுக, அதிர்ந்த பாஜக, விழித்த திமுக..!

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க போகும் அன்புமணியின் பிளான் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீரென தங்களுக்கு எதிராக, இத்தனை கட்சிகள் வண்டியை கிளப்பிவிட்டுள்ளது, தமிழக பாஜகவுக்கே சற்று ஷாக்தான்.. அதிலும் பாமக வேற லெவலில் நின்று யோசித்து வருகிறது.. போதாக்குறைக்கு அன்புமணி நேற்று தந்துள்ள பேட்டி, அதிமுகவுக்கே ஷாக்தான்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, நாம் பார்த்த பாஜக வேறு.. இன்று நாம் பார்த்து கொண்டிருக்கும் பாஜக வேறு.

நிறைய வேறுபாடுகள் அது முன்னெடுத்து வரும் அரசியலில் தென்படுகிறது.. ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணியே வைக்கவில்லை என்றாலும்கூட, அசால்ட்டாக அப்போது வெற்றி பெற்று கொண்டிருந்தார்..

அதேபோல, கூட்டணி விவகாரத்தில் டெல்லி பாஜகவும், ஜெயலலிதா என்ன முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தனர். இத்தனை சீட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததேயில்லை.. மிரட்டல் விட்டதில்லை.. அவசரப்படுத்தியதில்லை.. சவால் விட்டதில்லை.. தனித்து நின்று வெற்றி பெற்று, "கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவோம்" என்று அண்ணாமலை போன்று அதிமுகவை மிரட்டி சீட் கேட்டதில்லை.

துணிச்சல்

துணிச்சல்

காரணம், இத்தனை சீட் தர முடியும் என்ற தங்களின் உடன்பாட்டுக்கு பாஜக சம்மதிக்காவிட்டால், தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றலும் துணிச்சலும் ஜெ.விடம் தாராளமாகவே நிரம்பி கிடந்தது.. ஜெ.,மறைவுக்கு பிறகு, அதிமுகவே தலைகீழாகிவிட்டது.. உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தும், அமைதிப்போக்கை கடைப்பிடிக்கிறது.. அவ்வப்போது சில சீனியர்கள், இதற்கு பதிலடி தந்தாலும், பாஜக அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

தனித்து போட்டி

தனித்து போட்டி

லேசான விரிசல் பாஜக - அதிமுக கூட்டணிக்குள் எழுந்துள்ள நிலையில்தான், பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.. இதற்கு காரணம், திமுக & அதிமுக என 2 கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தும், பெருவாரியான வெற்றியை பாமக பெற முடியவில்லை.. தனித்து போட்டியிட்டும்கூட எதிர்பார்த்த அளவுக்கு பாமகவால் சாதிக்க முடியவில்லை.. அதனால்தான், தன்னுடைய தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாராம் அன்புமணி.. அதற்காக, வரப்போகும் எம்பி தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதிருப்தி ஓட்டு

அதிருப்தி ஓட்டு

பாஜக இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி, அதன் மூலம் பாஜகவின் அதிருப்தி ஓட்டுகள், மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுகள் இரண்டையுமே தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதே அன்புமணியின் தீர்க்கமான நம்பிக்கையாக இருக்கிறதாம்.. எப்படி பார்த்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துதான், எந்த தேர்தலையும் சந்திக்க வேண்டிய நிலைமை இன்று பாமகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. ஆனால், நேற்றைய தினம் அன்புமணி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியை பார்த்து, பாஜக, திமுக, அதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, என மொத்த பேரும் அதிர்ந்து போய் உள்ளனர்.

கூச்சமா இருக்கு

கூச்சமா இருக்கு

செய்தியாளர்களிடம் பேசும்போது யார் உண்மையான எதிர்க்கட்சி என்ற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு அன்புமணி, "சட்டப்பேரவையில் அதிமுக எண்ணிக்கை அடிப்படையில்தான் எதிர்க்கட்சியாக உள்ளது...ஆனால், மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசியும் அதை நிறைவேற்றவும் வைப்பது எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது... அந்த வகையில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி... இதை திரும்ப திரும்ப சொல்வதில், எங்களுக்கே கூச்சமாக உள்ளது.

கோட்டையில் பாமக கொடி

கோட்டையில் பாமக கொடி

சனாதன தர்மம் குறித்த ஆளுநரின் பேச்சு குறித்து பழையதை பேச வேண்டாம்... நாட்டில் இப்போது மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவைதான் தேவை. அதுகுறித்துதான் பேச வேண்டுமே தவிர. 2,000, 3,000 ஆண்டுகள் பழமையானது குறித்து பேசினால் எந்த பயனும் கிடையாது" என்று கூறினார் அன்புமணி.. இந்த பேச்சு 2 விதமான சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் அக்கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது ஏற்க முடிகிறது..

வன்னியரசு

வன்னியரசு

அதற்காக அதிமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு, நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று அன்புமணி சொன்னதுதான் இப்போது ஹாட் பேச்சாக உள்ளது. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு, 2026-ல் பாமக ஆட்சிதான்.. அதுவும் கூட்டணி ஆட்சி என்று அன்புமணி கூறியிருந்தார்.. இதற்கு விசிகவின் வன்னியரசு ஒரு ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார்.. அதில், "சீமான், அண்ணாமலை போல இவரு வேற குறுக்க மறுக்க வந்து காமெடி பண்றாரு" என்று கிண்டல் செய்திருந்தார்.. இப்போது, எதிர்க்கட்சியே நாங்கள் தான் என்று சொல்லி உள்ளதற்கு, அதிமுக என்ன சொல்ல போகிறது என்பதே எதிர்பார்ப்பு..

 கவர்னர் ரவி

கவர்னர் ரவி

அதுமட்டுமல்ல, ஆளுநர் பேசிய சனாதன விஷயத்தை எதிர்க்கட்சிகள் 3 நாட்களகவே கேள்வி எழுப்பி கொண்டிருக்கும் நிலையில், அன்புமணி ஏன் அதை பெரிதாக்க வேண்டாம் என்று சொல்கிறார்? என்ற சந்தேகமும் தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.. அதேசமயம், பாமகவின் சமீபகால செயல்பாடுகள், குறிப்பாக அன்புமணி ராமதாஸ் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு, சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாம்.. தயவுதாட்சண்யம் இல்லாமல், களையெடுப்புகளையும் அன்புமணி கையில் எடுத்துள்ளது, பாமகவுக்கே புதுரத்தம் பாய்ச்சுவது போல உள்ளதாக கருதப்படுகிறது.. வடமாவட்டங்களையும் தாண்டி, தென்மண்டலங்களிலும், பாமக வீறு கொண்டு எழ வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+