ஸ்மார்ட் மூவ்! விடாமல் கண்காணித்த கேமராக்கள்! சுரங்க பாதைகளில் நீர் தேங்காமல் காத்தது எப்படி? செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.

How CCTV cameras are checking the flood condition in the sub ways amid the heavy rain in Chennai?

சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. 20 இடங்களில் லேசான அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதே சமயம் கத்திப்பாரா உள்ளிட்ட சப் வே பாலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கே தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிகாரிகளுக்கு உத்தரவு; சென்னையில் விடாமல் மழை பெய்து வரும் நிலையில் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சென்னை சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கெல்லாம் தேங்குகிறதோ அங்கெல்லாம் உடனே கண்காணித்து ஆக்சன் எடுக்க வேண்டும்.

மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த குழுக்கள் நேரடி ஆய்வு, சிசிடிவி கேமரா ஆய்வுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

சுரங்கத்தில் கேமரா: சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும். இதற்காக உடனுக்குடன் சுரங்க பாதைகளுக்கு சென்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி
கேமரா உதவியுடன் மழை நீர் உயரும் அளவு , குறையும் அளவு விடாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது- சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+