Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 பேரை காவு வாங்கிய நீர்மூழ்கி கப்பல்! டைட்டானிக் மூழ்கிய அட்லாண்டிக் கடலின் ஆழம் இதுதான்-அடேங்கப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் பலியான நிலையில் தான் அட்லாண்டிக் கடலின் ஆழம் மற்றும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் எவ்வளவு ஆழத்தில் உள்ளது. டைட்டானிக் கப்பலுக்கும், டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதறிய பாகங்களுக்கும் இடையேயான தொலைவு பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருகாலத்தில் உலகில் மிகப்பெரிய நீராவி என்ஜின் கப்பலாக டைட்டானிக் இருந்தது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் இதில் பயணம் செய்ய முடியும். கடந்த 1912ல் ஏப்ரல் மாதம் டிரான்ஸ் அட்லாண்டிக் பயணத்தை டைட்டானிக் தொடங்கியது.

 How deep in the ocean when Titanic submersible which blast and killed 5?

4 வது நாள் பயணத்தின்போது டைட்டானிக் பெரிய பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி கடலுக்குள் மூழ்கியது. இதில் 1500க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதையடுத்து டைட்டானிக் கப்பலை தேடும் பணி நீண்டகாலமாக நடந்தது.

5 கோடீஸ்வரர்கள்: இறுதியாக கடந்த 1985ல் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை பார்க்க தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனத்தின் ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பல் புறப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலில் மொத்தம் 5 பேர் பயணித்தனர். பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரெஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றி நர்கோலெட் (77) மற்றும் ‛தி ஓசன் கேட்' நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் நீர்மூழ்கி கப்பலில் சென்றனர். இவர்கள் அனைவரும் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்.

2 மணிநேரத்தில் மாயம்: இந்த நீர்மூழ்கி கப்பல் பயணத்தின் 2 மணிநேரத்துக்குள் மாயமானது. அதாவது கடலுக்குள் சென்ற ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலானது தண்ணீரின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டு இருந்த தகவல் தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய கப்பலில் இருந்து முற்றிலுமாக தொடர்பை இழந்தது. இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். 4 நாட்களாக இந்த மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்தது.

சோனார் கருவி மற்றும் புது டெக்னாலஜியுடன் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் மூலம் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையே தான் நேற்று நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஸன் முழுவதுமாக காலியானதாக தகவல்கள் வெளியானது. இதனால் மீட்பு பணி விரைவுப்படுத்தப்பட்டது. அப்போது தான் ரிமோட் தொழில்நுட்ப கருவி மூலம் கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலின் அருகே குப்பைகள் போல் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேரும் பலி: இதனை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. மேலும் தொடர்ந்து நடந்த மீட்பு பணி மற்றும் ஆய்வின்போது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதும், அதில் பயணித்த 5 பேரும் இறந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் Catastrophic Implosion என்ற உள்வெடிப்பு தான் இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதாவது கடலின் உள்பகுதியில் தண்ணீரின் அழுத்தம் என்பது அதிகமாக இருக்கும். இந்த வேளையில் டைட்டானியம் மற்றும் காப்பர் பைபர்களின் கலவையில் உருவாக்கப்பட்ட எலாஸ்டிக் தன்மை கொண்ட டைட்டன் கப்பல் வேகமாக சென்று தண்ணீரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

12,500 அடி ஆழம்: இதற்கிடையே தான் கடலுக்கு அடியில் டைட்டானிக் கப்பல் எவ்வளவு ஆழத்தில் உள்ளது. நீர்மூழ்கி கப்பல் எவ்வளவு ஆழத்தில் வெடித்து சிதறியது என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் உள்ள வடக்கு அட்லாண்டிக் கடலில் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து கீழே சுமார் 12,500 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ளது.

இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கடலின் மேற்பரப்பில் இருந்து 3.81 கிலோமீட்டர் தொலைவில் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடக்கின்றன. உலகின் அதிக உயரம் கொண்ட புர்ஜ் கலிபா கட்டத்தை செங்குத்தாக இந்த கடலில் இறக்கினால் 2,717 அடி ஆழம் வரை தான் செல்லும். அப்படியென்றால் 4க்கும் அதிக புர்ஜ் கலிபா கட்டடத்தை செங்குத்தாக இறக்கினால் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் உள்ள பகுதியை நாம் அடையலாம்.

நீர்மூழ்கி கப்பல் பாகம்: உண்மையிலேயே இவ்வளவு தொலைவு கடலுக்கடியில் சென்று டைட்டானிக் கப்பல் பாகங்களை பார்ப்பது மிகவும் சவாலானது. ஏனென்றால் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குள் அதிகப்படியாக இதுவரை 1,090 அடி ஆழம் வரை மட்டும் செல்ல முடிந்துள்ளது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடலில் 3,300 அடி ஆழத்தை கடந்தாலே அது மிட்நைட் ஜோன் என்பார்கள். ஏனென்றால் அதற்கு பிறகு கடல் பகுதி என்பது மிகவும் இருட்டாக இருக்கும்.

இத்தகையக சவாலுக்கு மத்தியில் தான் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் 12,500 அடி ஆழத்துக்கு சென்று டைட்டானிக்கின் பாகங்களை பார்க்க முயன்று பலியாகி உள்ளனர். தற்போது டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகம் என்பது கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலில் உடைந்த பாகங்களில் மேலே 1,600 அடி உயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் உயிரிழந்த 5 பேரின் உடல்களை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

உண்மையான ஆழம் எவ்வளவு: அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் பாகங்கள் கிடக்கும் பகுதி தான் 12,500 அடி ஆழமாகும். மாறாக அட்லாண்டிக் கடலின் அதிகபட்ச ஆழம் என்பது 27,493 அடியாகும். அதாவது ஏறக்குறைய 9 கிலோமீட்டராகும். இந்த ஆழமான பகுதி என்பவு புவேர்ட்டோ ரிக்கோ தீவின் வடக்கே போர்ட்டோ ரிக்காவில் உள்ளது. மேலும் அட்லாண்டிக் கடலின் ஆழம் என்பது ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டு வரும் நிலையில் சராசரி ஆழம் என்பது 11,962 அடியாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+