யாரந்த நஜீப்? செந்தில் பாலாஜிக்கு விடிவெள்ளியாக வந்த அந்த "கேஸ்".. ஜாமீன் கிடைக்க முக்கிய காரணம்!
சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் இரண்டு கேஸ்கள் கவனம் பெற்றுள்ளன. அதிலும் நஜீப் என்பவரின் கேஸை உச்ச நீதிமன்றம் நேரடியாக குறிப்பிட்டு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட வழக்குகள்: நீதிபதி ஓகா, இன்று தீர்ப்பை அறிவிக்கும் போது, அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்தார். அவர்கள் செய்த சில செயல்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில்., கடுமையான ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. ஜாமீனும் கொடுக்க முடியாது.. விசாரணையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது . இரண்டிற்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது.

நாங்கள் நஜீப் என்பவரின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சிலரின் பிற தீர்ப்புகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கிறீர்கள்.. அதை எதிர்க்கிறீர்கள்.. அதே சமயம் விசாரணையையும் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதை எல்லாம் கருத்திக்கொண்டு.. நாங்கள் நஜீப் வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படியில்.. ஜாமீன் வழங்கி உள்ளோம். ஆனால் மிகவும் கடுமையான நிபந்தனைகள் உள்ளன.
நீங்கள் வழக்கை தாமதம் செய்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் பெயிலும் கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்கள். இரண்டையும் ஒன்றாக எப்படி பயன்படுத்த முடியும்? என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்
நஜீப் வழக்கு: மத்திய அரசுக்கு எதிராக கே. ஏ. நஜீப் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், 1967 ('யுஏபிஏ') சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ('யுஏபிஏ') கீழ் குற்றம் சாட்டப்பட்ட கே. ஏ. நஜீப்பிறகு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் ஜாமீன் வழங்குவதில் உள்ள தயக்கத்தை காட்ட கூடாது.
அவருக்கு எதிராக விசாரணை செய்யவில்லை. விசாரணை தாமதம் செய்கிறீர்கள். விசாரணை தாமதம் ஆகும் போது ஜாமீனையும் மறுக்க கூடாது, ஜாமீனை வழங்கியே ஆக வேண்டும். ஒருவரின் விசாரணை தாமதம் ஆனால் ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்று கூறியுள்ளனர்.
கே.ஏ.நஜீப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர். 2010 ஆம் ஆண்டு ஒரு மலையாளப் பேராசிரியரின் கையை ஒரு கும்பல் வெட்டிய வழக்கில் கைதான நிலையில் அவருக்கு ஜாமீனும் இல்லாமல் விசாரணையும் செய்யாமல் இருந்ததை குறிப்பிட்டு நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். இந்த தீர்ப்பு இன்று செந்தில் பாலாஜி வழக்கில் பயன்படுத்தப்பட்டது.
இன்னொரு வழக்கு: இது போக நேற்றே பிஎம்எல்ஏ வழக்கில் இதேபோல் ஒரு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுவும் கூட இன்று செந்தில் பாலாஜிக்கு சாதகமாக மாறி உள்ளது.
பணமோசடி வழக்கில் சத்தீஸ்கர் மாநில முதல்வரின் அலுவலக முன்னாள் துணை செயலாளர் சவுமியா சவுராசியாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. சத்தீஸ்கர் மாநில சிவில் சர்வீசஸின் முன்னாள் அதிகாரியான சௌராசியா, முதல்வர் பூபேஷ் பாகேலின் அலுவலகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு, சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) பணிபுரிந்து வந்தார்.
அவர் நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று இவருக்கு ஜாமீன் வழங்கியது. செந்தில் பாலாஜி கைதான அதே பிஎம்எல்ஏ வழக்கில் இவர் கைதானார். மனுதாரர் ஏற்கனவே 1 வருடம் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டார் என்பதையும், சக குற்றவாளி வழக்கமான/இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருப்பதையும் கருத்தில் கொண்டு, விசாரணை நடக்காமல் தாமதம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குகிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுவும் கூட இன்று செந்தில் பாலாஜிக்கு சாதகமாக மாறி உள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications