உணவு டெலிவரி பாய் போல் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுத்த ரவுடிகள்! சுதாரிப்பதற்குள்... நடந்தது என்ன?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது புதிய வீடு கட்டுமான பணிகளை பார்வையிட சென்ற போது உணவு டெலிவரி ஊழியர் போல் உடை அணிந்த இருவர் அவரிடம் ஏதோ பேச்சுக் கொடுத்த போதே அவர் லேசாக சுதாரிப்பதை அறிந்து அந்த மர்ம நபர்கள் வெட்டியதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் தான் வசிக்கும் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். தற்போதுதான் அங்கு அஸ்திவாரம் போடப்பட்டு கட்டடம் எழுப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அந்த வீட்டு பணிகள் எப்படி நடக்கிறது என்பதை அறிய தினந்தோறும் அங்கு ஆம்ஸ்ட்ராங் செல்வார்.

இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு பட்டினம்பாக்கத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த மரணத்திற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என அவருடைய குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவரை கொல்ல திட்டம் போட்டிருந்தனர்.
அதிலும் ஜூலை 5 ஆற்காடு சுரேஷ் பிறந்தநாள் அன்றோ இல்லை ஆகஸ்ட் 18 அவருடைய இறந்த நாளன்றோ கொலை செய்வது என முடிவு செய்திருந்தனர். இதற்காக கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டிருந்தனர். ஜூலை 5ஆம் தேதி அவரை கொல்ல முடிவு எடுத்து ஸ்கெட்ச் போட்டனர்.
இதற்காக அந்த பகுதிகளை நோட்டமிட்ட போதுதான் அந்த புதிய கட்டுமான பணி நடக்கும் வீட்டிற்கு எதிரே பிரியாணி கடை இருப்பது தெரியவந்தது. அந்த கடையில் நிறைய உணவு டெலிவரி ஊழியர்கள் நிற்பதை இவர்கள் கண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கிற்கு கராத்தே தெரியும் என்பதால் அவர் தம்மை கண்டுபிடிக்காத அளவுக்கு போக வேண்டும் என கருதி உணவு டெலிவரி ஊழியர்கள் போல் 4 பேர் வந்துள்ளனர்.
அதில் இருவர் ஒரு புறமும், மற்ற இருவர் இன்னொரு வழியிலும் நின்றுக் கொண்டனர். இந்த இருவரின் குறி தப்பினால் அவர் எப்படியும் எதிரே இருக்கும் வழியாக தான் ஓடுவார், அப்படி வந்தால் மற்ற 2 பேர் அவரது உயிரை எடுப்பது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தனர். அதன்படி ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்ட அவர்கள், திடீரென இருவர் மட்டும் போய் அவரிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துள்ளனர்.
இவர்கள் சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் கேட்பதை ஆம்ஸ்ட்ராங் அறிந்து கொண்டு "ஏய் ஏய்" என அழைத்துள்ளார். அதற்குள் அந்த இருவரும் அவரது கவனத்தை திசை திருப்ப யாரோ பின்னால் இருப்பது போல் "அண்ணா அண்ணா" என எச்சரிக்கை செய்து போல் நடித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கும் திரும்பி பார்த்த போது உடனே அவரது காலில் 4 இடங்களில் வெட்டிவிட்டனர். இதனால் ஓடாமல் அவர் அதே இடத்திலேயே நின்றிருந்தார். இதை அடுத்து கழுத்தில் வெட்டிய போது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் ஆகியவை துண்டானது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு கராத்தே தெரியும் என்பதால் அவர் வெட்டும் போது தடுத்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடலாம் என கருதி அதையும் அந்த கொலையாளிகள் கொண்டு வந்தனர்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications