போட்டியில் இருந்த 2 பேர்.. விரும்பாத திமுக? திடீரென வந்த சுதா.. மயிலாடுதுறையில் காங்கிரஸ் சர்ப்ரைஸ்
மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான போட்டியில் மேலும் 2 பேர் இருந்த நிலையில் ஆர் சுதா சர்ப்ரைஸ் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர். திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இரவோடு இரவாக அறிவிப்பு; இதையடுத்து மறுநாளே நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியானது.
மயிலாடுதுறை ஏன் தாமதம்: மயிலாடுதுறை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நாளையொடு வேட்புமனு முடியும் நிலையில் பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதை காங்கிரஸ் இவ்வளவு நாள் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே அறிவிக்கப்பட இருந்த வேட்பாளரை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் முழு விருப்பத்தோடு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரவீன் சக்ரவர்த்தியை நியமிக்க காங்கிரஸ் நினைத்தது. இவர் ராகுலு நெருக்கம். ஆனால் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரவீன் சக்ரவர்த்தியை காங்கிரஸ் கைவிட்டது. இதோடு இல்லாமல் அந்த நபர் உள்ளூர் கிடையாது . அவர் வெளியூர் என்பதால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் அவரை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
நாசே ராமச்சந்திரன் என்பவரும் முன்னிலையில் இருந்தாலும் அவருக்கு உள்ளூர் அனுதாபிகள் அதிகம் இல்லை.
திடீர் அறிவிப்பு; கடைசியில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இங்கே வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்ததால் திமுக தரப்பிற்கு பிரஷர் அதிகரித்தது. காரணம் திமுக அமைச்சர்கள், முதல்வர் தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.,
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அப்படி இருக்க காங்கிரஸ் தொகுதிகளில் கூட கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் இங்கே வேட்பாளரைஅறிவிக்காமல் இருந்தது.
நாளையொடு வேட்புமனு முடிய உள்ள நிலையில் இது திமுகவிற்கு பிரஷரை அதிகப்படுத்தியது. அதோடு வேட்பாளரை வேகமாக அறிவித்தால்தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அழுத்தம் கூடியது. திமுக தந்த பிரஷர், தொண்டர்கள் கேட்ட கேள்வி என்று பல காரணங்கள் காரணமாக இன்று இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications