"சிட்டிசன்".. ஆக்சன் எடுக்காத ஜெ.. வாச்சாத்தியில் நீதி பெற போராடிய மார்க்சிஸ்டுகள்.. வென்றது எப்படி?
சென்னை: வாச்சாத்தியில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, ஒரு கிராமமே சூறையாடப்பட்ட சம்பவத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆக்சன் எதுவும் எடுக்காத போது.. மார்க்சிஸ்ட் தோழர்களின் தொடர் போராட்டம் காரணமாக அங்கே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடைசியில் ஒருவழியாக நீதி கிடைத்துள்ளது. இது காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்றாலும் கூட.. ஒரு வழியாக.. இந்திய தண்டனை சட்டம் கொலை குற்றவாளிகளுக்கு நீதி பெற்று கொடுத்துள்ளது.
வாச்சாத்தி பற்றி தெரியாத ஒரு சில 90ஸ் குழந்தைகள், 20கே குழந்தைகளுக்கு எளிதாக சொல்ல வேண்டும் என்றால் சிட்டிசன் படத்தைதான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமத்தை அதிகாரிகள், போலீசார் எல்லாம் சேர்ந்து சூறையாடி, பெண்களை பலாத்காரம் செய்து அவர்களை கொன்று, கிராமத்தையே அழிப்பதுதான் கதை.

அவர்களுக்கு நீதி வேண்டி.. போராட வந்த சூப்பர் ஹீரோதான் சிட்டிசன். படத்தில் நீதிக்கு போராட சிட்டிசன்கள் வந்தனர்.. ஆனால் நிஜத்தில் அப்படி ரீல் சூப்பர் ஹீரோக்கள் யாரும் வரவில்லை.. வந்தது நிஜ சூப்பர் ஹீரோக்கள்.. மார்க்சிஸ்டுகள். இந்தியாவின் மிக நீண்ட நீதி போராட்டத்தை.. அரசுக்கு எதிராக.. மிகப்பெரிய அரசு இயந்திரத்திற்கு எதிராக.. போலீஸ், அதிகார பலத்திற்கு எதிராக பெரிய அரசியல் பலமின்றி வெறும் மக்கள் பலத்தோடு நடத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் - கம்யூனிஸ்ட் தோழர்கள்.
என்ன நடந்தது?: வாச்சாத்தி என்பது மிக அழகிய மலைக்கிராமம். ஒருவேளை அங்கே அப்படி இரு நிகழ்வு நடக்கவில்லை என்றால்.. இன்று இன்ஸ்டா ரீல்களில் இளைஞர்கள் "wanderlust" செய்யும் இடங்களில் ஒன்றாக மாறி இருக்கும். ஆனால் அங்கே நடந்த கொடூரம் ஒன்று.. இப்போதும் கூட வாச்சாத்தி என்றால் உடலுக்கு உள்ளே ஒரு அச்சத்தை.. ரத்த கொதிப்பை.. ரோமங்களில் சிலிர்ப்பை ஏற்படுத்தும். அங்கே நடந்த மலைகிராம மக்கள் மீதான வன்முறை உலகையே உலுக்கும் ஒன்றாக மாறியது.
( வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு 30 ஆண்டுக்கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. மலைவாழ் சங்கம் வரவேற்பு )
தர்மபுரி மாவட்டம், ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடையேதான் அந்த சின்ன மலைக்கிராமம் அமைந்துள்ளது. கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம் சொல்லில் வர்ணிக்க முடியாத அழகிய தோற்றத்தை கொண்டது. இப்போதும் கூட செய்தி சேகரிக்க அங்கே சென்றவர்களிடம் விசாரித்தால் சோகங்களை தாண்டி அவர்களையும் மீறி அங்கே உள்ள அழகை வர்ணிப்பார்கள்.

தமிழ்நாடு மலை கிராமங்களில் சந்தன மர கடத்தல் பிரச்சனை உச்சத்தில் இருந்த போதுதான் அந்த சம்பவமும் நடந்தது. தமிழ்நாடு முழுக்க மலை கிராமங்கள் போல அதிகாரத்தின் கோர பிடியில் சிக்கிய போதுதான் அந்த சம்பவமும் நடந்தது. 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி இங்கே இருந்த மக்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இங்கே இருந்த மக்கள் என்றால்.. மொத்த கிராமமும் சிறை பிடிக்கப்பட்டது.
சிறை பிடிக்கப்பட்ட கிராமம்; சிட்டிசன் படத்தில் பார்த்ததை போலவே 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர் இணைந்து இங்கே கூடி அந்த கிராமத்தை மொத்தமாக சிறை பிடித்தனர். கர்ணன் படத்தில் சமீபத்தில் பார்த்தது போல அதிகார வர்க்கம் மொத்தமாக வந்து கிராமத்தை சிறைபிடித்தது. அதிமுக ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில்.. போலீசுக்கு கூடுதல் அதிகாரம் இருந்த அந்த காலத்தில்.. எவ்வளவு முயற்சி செய்தும்.. அங்கே நடந்த கொடூரத்தை தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா இங்கே கொடூரத்தை தடுக்க.. அதன்பின் ஆக்சன் எடுக்க தவறிவிட்டார் என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் தொடங்கி பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
( நிர்வாணம்.. உணவில் எச்சில் துப்பிய கொடூரம்.. வாச்சாத்தி வன்கொடுமையை விவரிக்கும் வழக்கறிஞர் )
6 வருவாய் துறையினர் என 269பேர் உள்ளடங்கிய குழுவினர் அந்த கிராமத்தை சோதனை செய்வதாக கூறி உள்ளே மக்களை சிறை பிடித்து கொடுமையாக தாக்கி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினர். இங்கே மொத்தம் 140 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இதில் 90 பெண்கள். அதில் 18 அதிகாரபூர்வமாகவும், பல பெண்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். அதோடு அங்கே பெண்கள் பலரும்.. கிட்டத்தட்ட எல்லோரும் நிர்வாணம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.

சிபிஐ: இந்த விவகாரத்தில் அரசு முழுக்க முழுக்க போலீஸ் தரப்பிற்கு ஆதரவாக இருந்தது. பெண்களுக்கு எதுவும் ஆகவில்லை என்று கூட அரசு வாதம் வைத்தது. அப்போது போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா கூட துணியவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள், இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து போராட தொடங்கினர். 1993ல் தொடங்கிய சட்ட போராட்டம் 20 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் முடிவிற்குதான் வந்தது.
இதில் போலீஸ் விசாரித்தால் சரியாக இருக்காது.. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதன்பின் 1995ஆம் ஆண்டு சி.பி.ஐ க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில்.. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கும் வகையில் குற்றப்பத்திரிக்கை உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து எல்லோரும் அடுத்தடுத்த நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
( மறையாத வடுக்கள்.. 30 ஆண்டுகால துயரம் வாச்சாத்தி.. 1992 முதல் 2023 வரை காலம் கடந்தும் சாகாத நீதி)
போலீசார் மூலம் ரிமாண்ட் செய்யப்பட்ட இவர்கள்.. ஜாமீனில் வெளியே வர முயன்ற போது அவர்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட்தான். முக்கியமாக அங்கே இருந்த கிராம் மக்களுக்கு சட்ட போராட்டம் நடத்த காசு இல்லை. அதிகார ஆதரவு இல்லை. ஆனால் இவர்களுக்கு pro bono முறையில் காசு இன்றி மக்கள் நீதிக்கம் சட்ட போராட்டம் செய்தது என்னவோ மார்க்சிஸ்ட்தான்.
அதன்பின் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணையில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசாரணையை ஒரு மாவட்டத்திற்கு கீழ் கொண்டு வரவே பெரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மேலும் 3 ஆண்டுகள் கழித்துதான் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இதில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று கூறியது.
ஆனால் நீதி கிடைக்கும் முன் 54 பேர் இயற்கையாக பலியாகிவிட்டதால்.. கடைசியில் 215 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் 12பேருக்கு 10ஆண்டுகள் சிறையும், 5பேருக்கு 7ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3ஆண்டுகள் சிறை தண்டனை என்று கூறப்பட்டது.
இதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில்தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து.. மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுத்துள்ளது. இந்த மக்களுக்கு எதிரான கொடுமைக்கு உயர் நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தை விடாமல் செய்தது.. மார்க்சிஸ்ட் தோழர்கள்! இனி இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றாலும் அங்கும் அவர்களுக்காக நிற்க போவது ஒரு தோழனே!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications