வாழ்த்தும் இல்லை.. கூட்டணிக்கும் செக்.. அதிமுகவை சைலண்ட்டாக அவமானப்படுத்திய தேமுதிக பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் அதிமுகவை சைலண்ட்டாக அவமானப்படுத்தி உள்ளார்.

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.

How did DMDK Premalatha insult AIADMK with her alliance talk

திமுக வேட்பாளர்கள்

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள்

அதிமுகவில் மாநிலங்களவை எம்பி (ராஜ்யசபா எம்பி) தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி இன்று வெளியிட்டார்.

தேமுதிகவுக்கு அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் இடம் வழங்கப்படும். அவர்களுடன் கூட்டணி தொடருகிறது என்று அதிமுக அறிவித்துள்ளது.

அவமானம்

இப்படிப்பட்ட நிலையில்தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் அதிமுகவை சைலண்ட்டாக அவமானப்படுத்தி உள்ளார். அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

அப்படிப்பட்ட நிலையில் கூட்டணி பற்றி இப்போது பேச முடியாது என்று கூறி பிரேமலதா செக் வைத்துள்ளார். அதோடு அதிமுக எம்பிக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் அசிங்கப்படுத்தி உள்ளார்.

2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வு இருக்கும். தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்

அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது, என்று கடுமையாக அதிமுகவை தாக்கி பேசி இருக்கிறார் பிரேமலதா.

அதிமுகவை வாழ்த்தாத பிரேமலதா திமுகவுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரஸ் மீட்டில் குறிப்பிட்டிருந்தார். திமுக பொதுக்குழுவில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிரேமலதா நன்றி கூறி உள்ளார். அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறி திமுகவுடன் பிரேமலதா நெருக்கம் ஆகி உள்ளார். இதனால் திமுக பக்கம் எங்கே பிரேமலதா செல்ல நினைக்கிறாரோ என்ற கேள்வி.. விவாதங்கள் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+