இரவில் இன்ப ராணி.. பகலில் பார் டான்சர்.. துபாய் ஓட்டல் ஓனரை காத்திருந்து சம்பவம் செய்த தமிழக பெண்கள்
சென்னை: தனது வலையில் விழும் தமிழக மற்றும் கேரள பெண்களை இரவில் இன்ப ராணிகளாகவும், பகலில் பார் டான்சர்களாகவும் மாற்றியுள்ளார். தமிழக பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய துபாய் ஓட்டல் அதிபர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மாதம் ரூ,50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும், தங்குமிடம்- உணவு இலவசம் என்றும் கவர்ச்சிகரமாக 'வாட்ஸ் அப்’பில் விளம்பரங்கள் செய்தது தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்மையில் சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், துபாயில் வீட்டு வேலை செய்யவும், நட்சத்திர ஓட்டல்களில் நடனமாடுவதற்கும் இளம்பெண்கள் வேலைக்கு தேவை என்று 'வாட்ஸ் அப்’பில் விளம்பரங்கள் வந்தது. அதில் மாதம் ரூ,50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும், தங்குமிடம்- உணவு இலவசம் என்றும் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை நான் தொடர்புக் கொண்டேன். செல்போனில் பேசியவர், எனது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்தார். நானும் எனது புகைப்படத்தை அனுப்பி வைத்தேன். எனது புகைப்படத்தை பார்த்த அந்த நபர், சென்னைக்கு வருமாறு என்னை அழைத்தார். நானும் சென்னையில் அவர் கொடுத்த முகவரியில் உள்ள ஓட்டலுக்கு போனேன். அங்கு மேலும் 6 இளம்பெண்களும் என்னை போன்று வந்திருந்தார்கள்.
என்னை பார்த்து நீங்கள் பார்க்க அழகாக உள்ளீர்கள். உங்களுக்கு நடனமாட தெரியுமா? என்று கேட்டார். ஓரளவு நடனமாடுவேன் என்று கூறினேன். என்னுடன் வந்த மற்ற இளம்பெண்கள் நன்றாக நடனமாட தெரியும் என்றார்கள். பின்னர் எங்களை சந்தித்த நபர், ஒரு பத்திரத்தில் எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதில் ஓராண்டு துபாயில் தங்கி இருந்து அங்குள்ள ஓட்டலில் நடனமாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் எங்கள் 7 பேரையும் துபாய்க்கு விமானத்தில் அழைத்து சென்றார்கள். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நாங்கள் தங்க வைக்கப்பட்டோம்.
எப்படி நளினமாக நடனமாட வேண்டும் என்று சில நாட்கள் எங்களுக்கு அங்கு நடனபயிற்சி அளித்தார்கள். அரைகுறை ஆடையோடு நடனமாட வற்புறுத்தினார்கள். துபாயில் இருந்த நாங்கள், வேறு வழி இல்லாமல் நாங்களும் ஆடினோம். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல எங்களை விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தினார்கள். அதற்காக ஓட்டல் நிர்வாகத்தினர் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி கொண்டார்கள். ஆனால் எங்களுக்கு மாதம் ரூ,50 ஆயிரம் மட்டுமே சம்பளமாக தருவார்கள். வேறு வழியில்லாமல் நாங்களும் ஒரு பக்கம் நடனமாடிவிட்டு இன்னொரு பக்கம் இரவில் இன்ப ராணிகளாகவும் வேலை செய்து வந்தோம்.
இந்த விபச்சார தொழிலால் நாங்கள் பல கொடுமைகளை துபாயில் சந்தித்தோம். தினமும் இரவு 4, 5 வாடிக்கையாளர்களை அனுப்புவார்கள். பகலிலும் ஓய்வு கொடுக்க மாட்டார்கள். நடனமாட சொல்லி வற்புறுத்துவார்கள். ஒரு வழியாக மீண்டும் வருகிறோம் என்று ஏமாற்றிவிட்டு அந்த விபசார கொடுமையில் இருந்து தப்பிவிட்டு தற்போது சென்னை வந்துள்ளோம்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 6 பெண்களும் என்னோடு விபசார கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த பெண் உள்பட 3 ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துபாய் ஓட்டலில் எங்களை விபசாரத்தில் தள்ளிய அந்த ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த பெண்புகாரில் கூறியிருந்தார். அவரோடு பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 இளம்பெண்களும் புகார் அளித்தார்கள்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி விபசார தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 24), துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆபியா (24), தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த ஜெயக்குமார் (40) ஆகிய ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டார்கள்.
புகாரில் குறிப்பிட்டிருந்த துபாய் ஓட்டல் அதிபரின் பெயர் முஸ்தபா என்ற ஷகீல் என்பது தெரிய வந்தது. அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர். இந்த விபசார கும்பலுக்கு அவர்தான் தலைவராக செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ன. தமிழகத்தில் இருந்து துபாய்க்கு அனுப்பப்படும் இளம்பெண்களுக்கு குறிப்பிட்ட தொகையை விலையாக வைத்து கைதான மேற்கண்ட ஏஜெண்டுகளுக்கு லட்சக்கணக்கில் அவர் பணம் கொடுப்பாராம்.
இந்நிலையில் துபாய் ஓட்டல் அதிபர் ஷகீல் அண்மையில் கேரளா வந்திருந்தார். அவரை பற்றி 'லுக் அவுட்' நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கொடுக்கப்பட்டிருந்தது. இதை வைத்து ஓட்டல் அதிபர் ஷகீல் கேரளா வந்திருப்பதை விபசார தடுப்பு பிரிவு போலீசார் அறிந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துபாய் செல்வதற்காக ஷகீல் விமானத்தில் ஏறுவதற்கு காத்திருந்தார். அப்போது அவரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
அப்பாவி இளம்பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி துபாய்க்கு அழைத்து சென்று விபசாரத்தில் தள்ளிய குற்றத்துக்காக ஷகீலை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். ஷகீல் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் ஒரு பெண் ஏஜெண்ட் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications