Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மதுரவாயல்" பைபாஸில் "கோயம்பேடு" சாந்தி.. நடுராத்திரி காருக்குள் ஒரே அட்டகாசம்.. திணறி போன டிரைவர்

மதுரவாயல் பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு சாந்தியை நினைத்தாலே, வெலவெலத்து போகிறார்கள் மதுரவாயல் வாகன ஓட்டிகள்.. என்ன காரணம்?

Recommended Video

    Maduravoyal Bypass-ல் Lift கேட்டு வழிபறி செய்யும் CMBT சாந்தி *Crime

    சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. நேற்றுகூட ஆலந்தூர் மக்கள் சென்னை போலீசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

    சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, பொதுமக்களின் பங்களிப்போடு முக்கிய சந்திப்பு பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை, உயர் அதிகாரிகள் திறந்தும் வைத்தனர்.

    மதுரவாயல்

    மதுரவாயல்

    அப்படித்தான் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரிலும் காவல் உதவி மையம் சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.. போலீஸார் அங்கு காவலுக்கு இருந்தவரை குற்றங்கள் குறைந்து வந்த நிலையில், தற்போது அது செயல்படாமல் பூட்டிக்கிடப்பதாக தெரிகிறது.. எனவே, சில மாதங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, போதைப் பொருள் விற்பனை, திருட்டு போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும், உடனடியாக இந்த காவல் உதவி மையத்தை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்... இப்படிப்பட்ட காவல் உதவி மையங்கள், டோல்கேட் மற்றும் பைபாஸ் சாலைகளிலும் திறந்தால் நல்லா இருக்கும் என்றே தெரிகிறது.

     பைபாஸ் சாலை

    பைபாஸ் சாலை

    காரணம், மதுரவாயல் பைபாஸ் பகுதியில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.. கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவு நேரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் டோல்கேட் அருகே பெண் ஒருவர் நள்ளிரவு 1 மணிக்கு நின்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது.. அந்த காரை கைகாட்டி மறித்து நிற்க செய்து உதவி கேட்டார் அந்த பெண்.. தனியாக ஒரு பெண் நிற்பதை பார்த்ததும், உதவி செய்யும் நோக்கில் அந்த டிரைவரும் காரை நிறுத்தினார்.

     காருக்குள் சாந்தி

    காருக்குள் சாந்தி

    உடனே இந்த பெண் காருக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. காரை ஸ்டார்ட் செய்வதற்குள், திபுதிபுவென்று 4 பேர் காருக்குள் ஏறினர்.. டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டு மிரட்டினர்.. டிரைவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயை மிரட்டி பறித்தனர்.. இதை அந்த வழியாக சென்ற சக கார் டிரைவர்கள் பார்த்து அதிர்ந்துள்ளனர்.. உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. ஆனால், சைரன் சத்தம் கேட்டதும், 4 பேரும் எகிறி தப்பி ஓடிவிட்டனர்.. ஆனால், அந்த பெண், காருக்குள்ளேயே மாட்டிக்கொண்டார்.

     கோயம்பேடு சாந்தி

    கோயம்பேடு சாந்தி

    உடனே அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.. அந்த பெண் கோயம்பேட்டை சார்ந்தவராம்.. பெயர் சாந்தி.. வானகரம் டோல் கேட் அருகே, நடுராத்திரி பைபாஸ் சாலையில் இப்படி வழிப்பறி செய்வதுதான் தொழிலாம்.. அதிலும் தனியாக கார் ஓட்டி வருபவர்கள்தான் சாந்திக்கு முதல் குறியாம்.. இதையடுத்து, தப்பி சென்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.. கோயம்பேடு சாந்தி இப்போது ஜெயிலில் 1..2..3...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+