India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வயாகரா" மாத்திரையை சாப்பிட்டு ஆசை ஆசையாய்.. டக்குனு நின்றுபோன இதயம்.. டாக்டர் தரும் வார்னிங் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: உடலுறவின்போது, திடீரென இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.. இதுபோன்ற மரணங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று டாக்டர்கள் விளக்குகிறார்கள்... அதுகுறித்தும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு, நெல்லையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. 22 வயதான சக்திவேல் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.. புதுமண தம்பதி, மதுரவாயலில் வேலை பார்த்து தங்கி வந்துள்ளனர்.

பிரபல நடிகை.. மாமனார் முன்பு அந்த பிரபல நடிகை.. மாமனார் முன்பு அந்த "கோலத்தில்".. இதுல வீடியோ வேற.. மாங்காட்டில் என்ன நடந்தது?

இந்நிலையில், கல்யாணம் ஆகி 4 மாதத்தில் அவர்கள் 2 பேருமே தற்கொலை செய்து கொண்டனர்.. அப்போது ஒரு கடிதத்தையும் போலீசார் கண்டெடுத்தனர்.

ஆண்குறி

ஆண்குறி


அதில், "நாங்கள் உடலுறவு கொண்டோம்.. அப்போது என்னுடைய ஆண்குறியின் நரம்பு உடைந்து போய்விட்டது.. என்னால், குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடி கொண்டுள்ளோம்.. இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது... இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. உடலுறவின்போது ஏற்பட்ட பிரச்சனைக்கு, டாக்டரிடம் போகாமல், எந்தவிதமான மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளாமல் இருவருமே அநியாயமாக இறந்துவிட்டனர்.

 உடலுறவு

உடலுறவு

இப்போது இன்னொரு உடலுறவு மரணம் ஏற்பட்டுள்ளது.. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், தன்னுடைய தோழியுடன் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி உள்ளார்.. இவர்கள் காதலர்கள்.. வீட்டில் எதிர்ரப்பு கிளம்பவும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.. அந்த இளைஞருக்கு 28 வயதாகிறது.. நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார் காதலி.. 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.. இது ஒரு ஃபேஸ்புக் காதல்.

 உடலுறவு

உடலுறவு

சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் உடலுறவு கொள்ளும்போது திடீரென மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்... இது குறித்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, முதல்கட்ட விசாரணையில் இளைஞர் மது அருந்தி இருக்கலாம் என்றார்கள்.. பிறகு, எந்த மருந்தும் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை என்றும், உள்ளுறுப்பு பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

வயாக்ரா

வயாக்ரா

ஆனால், அதற்கு பிறகு, இளைஞரின் சட்டைப்பையில் இருந்து வயாகரா மாத்திரைகள் அதிகமாக கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் மீண்டும் ஒரு தகவலை தெரிவித்தனர்... ஒருவேளை, உடலுறவின்போது, வயாகரா மாத்திரையை இளைஞர் அதிகம் எடுத்து கொண்டாரா? என்று குறித்து, சம்பந்தப்பட்ட பெண் தோழியிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லி உள்ளனர்.. ஆக, ஒருபக்கம், தற்செயல் மரணம் என்றும், மறுபக்கம் இளைஞர் அதிகமாக வயாகரா பயன்படுத்தியது தான் காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், மாரடைப்பால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

வார்னிங்

வார்னிங்

உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.. ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு என்கிறார்கள். அந்தவகையில் இந்நிலையில், டைம்ஸ்ஆப் இந்தியாவுக்கு இருதயநோய் நிபுணரான டாக்டர் ஆனந்த் சஞ்சேதி என்பவர் சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், அவர் சில எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார்.. அவர் சொல்லும்போது, "ரத்தக்குழாய் சார்ந்த தமனி நோய்கள் இருந்து வரும் நிலையில், அவைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாதபோது, உடலுறவு போனற் கடுமையான நடவடிக்கைளின்போது மரணம் நிகழலாம்..

உடலுறவு

உடலுறவு

ஏனென்றால், உடலுறவு கொள்ளும்போதும் சரி, அல்லது அதுபோலவே மற்ற கடுமையான வேலைகளில் நாம் ஈடுபடும்போதும்சரி, இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஆக்ஸினும் தேவைப்படுகிறது.. அந்த நேரத்தில் ஆக்சிஜன் தேவையை உடனடியாக பூர்த்தி செய்துவிட வேண்டும்.. இல்லாவிட்டால், மோசமான விளைவு ஏற்படும், சில சமயம், மரணம்கூட நிகழ்ந்துவிடும்..

ஆபத்து

ஆபத்து

இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, இப்போதுள்ள வழக்கமான வாழ்க்கை முறையை உடனடியாக மாற்றி கொள்ள வேண்டும்.. சரியான அளவில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்கி, சரியான அளவில் பணியாற்றி, சரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படாது என்று சொல்ல முடியாது. ஆனால், அப்படி ஆபத்துகள் வராமல் தடுக்க இவைகள் உதவியாக இருக்கும்.. மொத்தத்தில் ஆக்சிஜன் அளவு எப்போதும் ஒரே மாதிரியான விகிதாச்சாரத்தில் ரத்தத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.

உடலுறவு

உடலுறவு

இதனிடையே, உடலுறவு மாரடைப்பு குறித்த ஆய்வும் பலமுறை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்... அதாவது, இதயம் முறையாக செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது, இதயம் துடிப்பது உடனே ந ற்கிறது, சுவாச இயக்கமும் நிற்கிறது.. இறுதியில், 'கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை' அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.. இந்த மாதிரி மாரடைப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.. அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள்.. ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது 6 வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு

இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு, உபியில் பிரயக்ராஜ் என்ற இடத்தை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.. இவருக்கு ஆண்மை குறைபாடு இருந்திருக்கிறது, அதனால், தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போகவும், நண்பர்களின் அறிவுரையை கேட்டு, வயாகராவை சாப்பிட ஆரம்பித்துள்ளார்.. 5-30 மில்லி கிராம் வயாக்ராவை சாப்பிட வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்களாம்.. ஆனால், இவரோ, 200 மிகி வயாகரா சாப்பிட்டார்..

ஆணுறுப்பில் வலி

ஆணுறுப்பில் வலி

இதன் விளைவு, திடீரென ஆணுறுப்பில் வலி ஆரம்பித்தது.. அந்த வலி அதிகமாகி கொண்டே போய் இறுதியில், விறைப்புத்தன்மையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது. ஆபரேஷன் செய்தும், விறைப்புத்தன்மை நீங்காமல், அவதிப்பட்டு வருகிறார் அந்த இளைஞர்.. மருத்துவர்களின் ஆலோசனையின்றி, சொந்தமாகவே மருந்தை எடுத்து கொள்வதால், இதுபோன்ற ஆபத்துக்களை இளைஞர்கள் சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது.

English summary
How did youth die of cardiac arrest while having sex with his girlfriend, doctors explain உடலுறவின்போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X