ஷாக்.. சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பின்னணி
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் இன்று இரவில் திடீரென பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஒரு பலியாகி உள்ள நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது.

மழைக்கு நடுவே பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்தனர். சில வாகன ஓட்டிகள் அங்கு ஒதுங்கி நின்றனர்.
இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தன. இதனால் அதன் அடியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் மீட்கப்பட்டனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஒருவர் இறந்துள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த பலத்த காற்றுக்கு மேற்கூரையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் திடீரென்று ஒரு நொடியில் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி விபத்துக்கு இன்னொரு விஷயமும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதாவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விபத்து குறித்த அளித்த பேட்டியில், ‛‛பெட்ரோல் பங்க்கின் மேற்கூரையை 2 தூண்கள் தான் தாங்கி இருந்துள்ளன. அதோடு அந்த மேற்கூரை அமைத்து 16 ஆண்டுகள் ஆகிறது'' என்றார். இதன்மூலம் மேற்கூரை 2 தூண்களால் தாங்கி இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மாறாக கூடுதல் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தால் ஒருவேளை விபத்து நிகழாமல் இருந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications