அதிமுகவின் அஸ்திவாரத்தில் கை வைத்து.. அப்படியே தூக்கிய திமுக.. இது புதுசா இருக்கே! கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பெண்கள் வாக்குகள் அதிகம் வந்தால் அது திமுக வாக்குகள். திமுக வாக்குகள் வந்து குவிந்து உள்ளது. பெண்கள் வாக்குகளை மொத்தமாக பல்வேறு திட்டங்கள் மூலம் அள்ளி உள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு: கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

How DMK almost took the AIADMK woman vote bank in Tamil nadu Lok Sabha Elections 2024

மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.


வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

முதலில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி நம்பரில் வாக்குப்பதிவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பொதுவாக வாக்கு சதவிகிதம் பல வித செய்திகளை சொல்லும். வாக்கு சதவிகிதம் அதிகம் இருந்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்கு என்பார்கள். அதே சமயம் பெண்கள் வாக்கு அதிகம் இருந்தால் அது அதிமுக வாக்கு என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. காலம் செல்ல செல்ல இதெல்லாம் மாறிவிட்டது.

இப்போது வாக்கு சதவிகிதம் தொகுதி தொடர்புடையது ஆகிவிட்டது. தொகுதி ரீதியான பிரச்சனையாக அது மாறிவிட்டது. உள்ளூர் பிரச்சனையையே இதற்கு காரணம். இப்போது பெண்கள் வாக்குகள் அதிகம் வந்தால் அது திமுக வாக்குகள் . திமுக வாக்குகள் வந்து குவிந்து உள்ளது. பெண்கள் வாக்குகளை மொத்தமாக பல்வேறு திட்டங்கள் மூலம் அள்ளி உள்ளனர். மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து மூலம் இப்படிப்பட்ட பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஆண்களின் வாக்குகள் குறைந்தால் கூட பெண்களின் வாக்குகளை அள்ளிவிட்டனர். இதற்கு முன் அதிக வாக்குகள் பதிவானால் அது அரசு வரும் வாக்கு என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது பல தொகுதிகளில் 70-80 வரை பதிவாகி உள்ளது. தருமபுரியில் அதிகம் பதிவாகி உள்ளது. வெயில் முடிந்த பின் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது .

தேர்தல் ஆணையம் கொஞ்சம் இதில் சரியாக செயல்பட்டு இருக்கலாம். சரியான எண்களை வெளியிட்டு இருக்கலாம். சில தொகுதிகளில் 10 சதவிகிதம் வாக்குகள் மாற்றத்தை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அவர்கள் சரியாக கணக்கு போட்டு இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையை இது இழக்க வைக்கும். இவர்களின் செயல்பாடு நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

ஏற்கனவே மின்னணு எந்திரம் மீது சந்தேகம், கேள்வி உள்ளது. ஜனநாயகத்தில் நம்முடைய வாக்குரிமை இது. இதில் கூட தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருக்க கூடாது. அவர்களின் மெத்தனம் கடுமையான விமர்சனங்களை, கேள்விகளை எழுப்பும். 1-2 சதவிகிதம் திருத்தப்பட்டால் ஓகே. 10 சதவிகிதம் எல்லாம் திருத்தப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+