Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடையாளம் உருவாகுமா? தனுஷ்கோடி- ராமேஸ்வரம் ரயில் பாதை எப்படி அமைக்கப்படுகிறது? சிக்கல்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 720-800 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடி- ராமேஸ்வரம் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை எப்படி அமைகிறது. இந்த பாதையின் பின்னணியை இப்போது பார்ப்போம்.

புன்னியஸ்தலமான ராமேஸ்வரம் மீது பாஜக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு அருகில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளுக்காகவே தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

How does Dhanushkodi-Rameswaram railway line is being constructed at a cost of 720-800 crore rupees?

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாக திகழ்ந்ததாம் தனுஷ்கோடி. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் சிக்கி மண்ணோடு மண்ணாக மாறியது. 1964 டிசம்பர் 17-ல் காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடல் பகுதியில் உருவானது. அது புயலாக மாறி டிசம்பர் 23-ல் தனுஷ்கோடியை தாக்கியதில் கடல் பொங்கி, பேரலை வீசியது. இதில் அந்த நகரில் இருந்த ஒரு சிலரை தவிர, ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர்.

அப்போது தனுஷ்கொடி ராமேஸ்வரம் ரயில்பாதையில் சென்ற ரயில் கடலில் விழுந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி முழுவதையும் அழித்த புயல், ரயிலையும், ரயில் பாதையும் முழுவதுமாக அழித்துவிட்டது. ரயில் பாதை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது ராமேஸ்வரம் எப்படி உள்ளதோ, அதுபோல் அன்றே இருந்த நகரம் தான் தனுஷ்கோடி. அந்த நகரம் அழிந்து போனதுடன் ரயில் பாதையும் அழிந்து போனது,

ஆனால் அழிந்து போன ரயில் பாதையை பாஜக அரசு மீண்டும் கொண்டுவர அதிக ஆர்வம் காட்டியது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரயில் பாதை அமையவுள்ள நிலப்பகுதி பேக் வாட்டர் என்று அழைக்கப்படும் உப்பங்கழிப் பகுதி என்று அழைக்கிறார்கள். இங்கு ரயில் பாதையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்தில் இருந்து 6 முதல் 7 மீட்டர் உயரத்தில் பாதையை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 18 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது,.

கடற்கரைக்கு மிக அருகே ரயில் பாதை அமைய உள்ளதால் அந்த தூண்கள் அதிக உறுதியோடு இருக்கவேண்டும் என்பதற்காக பல கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகள் செய்ய தாமதம் ஏற்பட்டு வருகிறது. ரயில் பாதைக்கு வனத்துறை நிலம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

How does Dhanushkodi-Rameswaram railway line is being constructed at a cost of 720-800 crore rupees?

தற்போதைய நிலையில் கோதண்டராமர் கோயிலில் இருந்து தனுஷ்கோடி வரை 10 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான சர்வே கல்லை தெற்கு ரயில்வே ஊன்றி உள்ளது. ஆனால் மீதமுள்ள 10 கி.மீ., நிலத்தில் 8 கி.மீ., வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருகிறது. அவை காப்பு காடுகளாக உள்ளதால் வனத்துறையினர் அந்த இடத்தை தர சம்மதிக்கவில்லை. நிலம் கையகப்படுத்த முடியாமல் ரயில்வே தவித்து ருகிறது. ரயில் பாதை திட்டம் நான்கு ஆண்டுகளாக முடங்கி உள்ளது. சுமார் 444 கோடி நிதி ஒதுக்கியும் பணிகளில் இப்போது வரை முன்னேற்றம் இல்லை.

தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசலுடன் தனுஷ்கோடிக்கு பயணிக்கும் மக்களுக்கு ரயில் சேவை துவங்கினால் நேரம், பணம் மிச்சமாகும். சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அதேநேரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும் என்று எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில் இதுபற்றி தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தாவது "2006-2007-ல் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டம் தொடங்குவதற்கு ரூ.11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது என்றும், 2023-2024-ம் ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

2006-2007-ல் இது போன்ற ஒரு திட்டத்தை அறிவிக்காததோடு நிதியும் ஒதுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 2011-ல் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு, இது தொடர்பான கேள்வியை எழுப்பியபோது, அதற்கு அன்றைய மத்திய அமைச்சர் முனியப்பா அது குறித்த அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே ஆய்வே முடியாத நிலையில் ரூ.11,400 கோடி ஒதுக்கியது எப்படி என்ற மர்ம ரகசியத்தை கே.எஸ்.அழகிரி விளக்க வேண்டும். நல்ல வேளை காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இல்லையெனில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடைபெற்றிருக்கும். 720-800 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடி- ராமேஸ்வரம் ரயில் பாதை விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+