Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாயிண்ட்மென்ட் கேட்டாராமே சசிகலாவை சந்திக்க.. யூடர்ன் எடுத்த "தலை"...டென்ஷனில் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடியாப்ப சிக்கல்களில் ஏற்கனவே அதிமுக சிக்கி கொண்டுள்ள நிலையில், அடுத்த பிரச்சனை எடப்பாடி பழனிசாமியை சூடேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகிருந்தே, பாஜகவின் நிழல் அதிமுகவின் மீது அழுத்தமாக விழுந்துவிட்டது.

இன்னும் ஓபனாக சொல்லப்போனால், பிரதான எதிர்கட்சியைப்போல பாஜக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், அதிமுகவை ஓவர்டேக் செய்து, திமுகவுக்கு நேரடியாகவே செக் வைக்கும் வியூகத்தை கையில் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதெல்லாம் தெரிந்தும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருமே பாஜகவிடம் நேரடியாக மோதவும் முடியாமல், திமுகவை வலுவாக எதிர்க்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர்... இதற்கு நடுவில் சசிகலாவின் ஆளுமையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளையும் எடப்பாடி தரப்பு கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் எடப்பாடியை தன் பக்கம் இழுத்து வர சசிகலா பிளான் செய்தால், சசிகலாவின் எழுச்சியை முறியடிக்கும் பிளானை எடப்பாடி தரப்பு மேற்கொண்டு வருகிறது.

 டெல்லி ஆதரவு

டெல்லி ஆதரவு

எனினும், டெல்லியின் ஆதரவு தனக்கு இருந்தால்தான், அனைத்தும் சாத்தியப்படும் என்று சசிகலா உணர்ந்துள்ளார்.. அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு ரஜினியை நேரில் சந்தித்து உதவி கேட்டதாக கூறப்பட்டது.. பாஜகவுக்கு சிபாரிசு செய்ய சொல்லி சசிகலா கேட்டதாகவும், அதற்கு ரஜினி உதவுவதாக நம்பிக்கை தந்ததாகவும் செய்திகள் வந்தன.. ஆனால், இரண்டரை மணி நேரம் ரஜினியின் வீட்டில் சசிகலா இருந்ததை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ளவே அப்போது முடியவில்லை..

 உளவுத்துறை

உளவுத்துறை

என்ன பேசினார்கள் என்று உளவுத்துறையிடம் விசாரித்துள்ளார்.. அவர்களுக்கு இந்த சந்திப்பில் பேசப்பட்ட தகவல்கள் முழுமையாக தெரியவில்லை என்றார்கள்.. அதற்கு பிறகுதான் கடைசி ஆயுதமாக ஓய்வு பெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் முயற்சித்தார் எடப்பாடி... ஆனால், அந்த முன்னாள் நீதிபதியிடம் இருந்து எந்த பதிலும் எடப்பாடிக்கு கடைசிவரை வரவில்லை என்றே தெரிகிறது.. காரணம், அந்த மாஜி நீதிபதியே இப்போது சசிகலா பக்கம் சாய போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிச்சாமிக்கும் மோடி அரசுக்கும் பாலமாக செயல்பட்டவர்தான் அந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி... எடப்பாடியும் அவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.. அதனால் எடப்பாடியின் அரசியலுக்கு நிறைய உதவிகளை செய்தார்.. டெல்லியில் உள்ள தனது செல்வாக்கை எடப்பாடிக்காக பயன்படுத்தினார்.. இதனால் நிறைய பலன் கிடைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு... அதேபோல, தனக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் அவர்மூலம் தான் டெல்லியில் லாபி செய்வார் எடப்பாடி.

 மாஜி நீதிபதி

மாஜி நீதிபதி

அந்தளவுக்கு இருவருக்கும் நல்ல நெருக்கம். ஆனால், சமீபகாலமாக, இருவருக்குமான நெருக்கத்தில் உரசல் ஏற்பட்டுள்ளது, சில கருத்து வேறுபாடுகளால் மாஜி நீதிபதி நட்பை முறித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி... பேச்சுவார்த்தை கூட இரு தரப்பிலும் இல்லையாம்.. இதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. ஏதாவது அதிருப்தியா என்றும் தெரியவில்லை.

Recommended Video

    ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால் பூரித்து போன சசிகலா.. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அதிரடி விளக்கம்
     அப்பாயிண்ட்மென்ட்

    அப்பாயிண்ட்மென்ட்

    இந்த நிலையில், அரசியலில் சசிகலா தீவிரம் காட்டத் துவங்கியிருப்பதால், சசிகலாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளாராம் அந்த மாஜி நீதிபதி. சசிகலாவோ, இன்னும் அப்பாயிண்மென்ட் தரவில்லை என்கிறது அவரது விசுவாசிகள் தரப்பு. ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில், மாஜி ஜட்ஜ் நடவடிக்கைகள் மேலும் டென்ஷனை எகிற வைத்து வருகிறதாம் எடப்பாடிக்கு..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+