"ஸ்மார்ட்" பிளானிங்.. கண்காணித்த கேமரா.. நொடிக்கு நொடி அப்டேட்! சென்னை "தப்பித்தது" எப்படி தெரியுமா?
சென்னை: சென்னையில் கனமழை பெய்த போதிலும் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்படவே இல்லை. இரவில் தேங்கிய தண்ணீர் அதிகாலை மழைக்கு பின் சட்டென வடிந்து உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்து வந்தது. அதிகாலை 4-5 மணி வரைக்கும் சென்னையில் விடாமல் மழை பெய்தது.
சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செமீ மழை பெய்துள்ளது. வில்லிவாக்கத்தில்தான் சென்னையில் அதிகமாக மழை பெய்துள்ளது.

மழை
வில்லிவாக்கத்தில் அதிகமாக 10 செமீ மழை பெய்துள்ளது. அங்கு நேற்று அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. இன்று அதிகாலை வரை வில்லிவாக்கத்தில் மழை பெய்து தற்போது நின்றுள்ளது. இந்த கனமழைக்கு பின்பாக சென்னையில் பல இடங்களில் காலையில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் என்றே மக்கள் பலரும் எதிர்பார்த்தனர். முக்கியமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்றே எதிர்பார்த்தனர்.

சென்னை
ஆனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்படவில்லை. கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகள் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை என்பதால் அங்கு மட்டும் வெள்ளம் ஏற்பட்டது. மற்ற சாலைகளில் காலையில் பொழுது விடுவதற்குள் வெள்ளம் வடிந்துள்ளது.

தண்ணீர் அளவு
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இங்கெல்லாம் வெள்ளம் அதிகாலையில் சட்டென வடிந்துள்ளது. மக்களும் இங்கே எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 4-5 மாதங்களாக கட்டப்பட்டு வந்த கழிவு நீர் கால்வாய்கள்தான் இதற்கு காரணம்.

சப் வே
அதே சமயம் சப் வே போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் இருக்க, ஸ்மார்ட் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. சென்னை சாலைகளில் பல இடங்களில் கேமராக்கள் இருக்கும். சிக்னல் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அதேபோல் சப் வேக்களில் பாதுகாப்பு கேமராக்கள் இருக்கும். இந்த கேமராக்களை வைத்து வெள்ள பாதிப்பை நொடிக்கு நொடி கண்காணித்து உள்ளனர் .

இரவு முழுக்க
கண்காணிப்பு இரவு முழுக்க தண்ணீர் தேங்குகிறதா என்று கேமராவை வைத்து கண்காணித்து உள்ளனர். கேமராவில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் மோட்டார் மூலம் அதிகாலையிலேயே தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். இதன் மூலம் சென்னையில் உள்ள தி நகர் சப் வே தொடங்கி "பாரம்பரியமாக" வெள்ளம் தேங்கும் 15 சப் வேக்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்பட்டு உள்ளது. இப்போதும் வெள்ள பகுதிகள் இப்படித்தான் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கேமரா
ஸ்மார்ட்டாக பிளான் செய்ததன் மூலம் நொடி நொடிக்கு தண்ணீர் தேங்கும் நிலவரம் கண்காணிக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்புகளையும் தாண்டி கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இங்கு இன்னும் முழுமையாக வெள்ள நீர் கால்வாய் பணிகள் சில இடங்களில் முடியவில்லை. இடையில் மழை பிரேக் எடுக்கும் பட்சத்தில் இங்கும் பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications