பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள்! எவ்வளவு தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டது தெரியுமா?
சென்னை: பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் அந்நாட்டின் அணுசக்தி கட்டளை அமைப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானின் அணு ஆயுதம் எவ்வளவு தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
அணு ஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு இருப்பது உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எப்போதுமே நல்லுறவு இல்லை. இருநாடுகளும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்குடன் உள்ளன. பல முறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போரும் வெடித்துள்ளது. ஆனால், 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து எல்லையில் கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தான் அடாவடியாக டிரோன்களை ஏவி தாக்க முயற்சிக்கிறது. ஏவுகணைகளையும் வீசி பாகிஸ்தான் தாக்க முயற்சித்த நிலையில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அம்சங்கள் அவற்றை வெற்றிகரமாக அழித்துள்ளன.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு உள்ளது?
எனினும், தொடர்ந்து போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது உலக நடுகளை கவலை அடைய வைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் உலக நாடுகள் உற்றுக் கவனித்து வருகின்றன. உலக அளவில் சில நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் சுமார் 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடம் முறையே 290 மற்றும் 225 அணு ஆயுதங்கள் இருக்கலாம். இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் உள்ளன.
அணு ஆயுத கொள்கை
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்த வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஏனெனில், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் நாட்டின் மீது நிச்சயம் உலகின் ஒட்டுமொத்த நாடுகளும் திரும்பும். மேலும், அது உலகப் போரையும் கூட ஆரம்பிக்க வைக்கும். இத்தகைய பிரச்சினைகள் இருப்பதால் அணு ஆயுதத்தை எந்த ஒருநாடும் கையில் எடுக்க யோசிக்கும்.
ஆனால், இந்தியாவின் அணு ஆயுதகொள்கைக்கும் பாகிஸ்தானின் அணு ஆயுதகொள்கைக்கும் வேறுபாடு இல்லை. முதலில் அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம் என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், அதற்கு நேர்மாறான அணு ஆயுத கொள்கையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இதனால் தான், பாகிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள் கொஞ்சம் ஆபத்தான விஷயமாக உள்ளது.
எவ்வளவு தூரம் தாக்க முடியும்
பாகிஸ்தான் தன்னிடம் உள்ள ஆயுதங்களை கொண்டு எவ்வளவு தொலைவுக்கு தாக்குதல் நடத்த முடியும் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானிடம் மிராஜ் III மற்றும் மிராஜ் V போர் விமானங்களும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. 350 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு Ra'ad II ஏவுகணையை சோதித்து பார்த்தது. இந்த ஏவுகணைகள் 600 கிலோ மீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்க கூடியது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications