25 "புள்ளிகள்" ரெடியாமே.. திணறும் திமுக.. உறைந்த அதிமுக.. குபீரென மலரும் "தாமரைகள்".. பாஜக கணக்கு?

25 எம்பிக்கள் தமிழகத்தில் வெல்ல போகிறார்கள் என்று அண்ணாமலை உறுதிபட கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக எம்பி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழகத்துக்கு குறி வைத்து வரும் நிலையில், 25 எம்பிக்கள் வெல்லப் போவது உறுதி என்ற மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு, பிற கட்சிகளுக்கு கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. இதில் பாஜகதான் முதல்நபராக வியூகங்களை வகுத்து வருகிறது.

ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவின் பேச்சு, தென் மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தது.

அமித்ஷா

அமித்ஷா

அந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை விரைவில் நிலைநாட்டும். அடுத்த 40 வருடங்கள் பாஜகவின் சகாப்தம்தான்... பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடமும் நம்பிக்கை உள்ளது" என்ற பேசியிருந்தார்.. இதற்கு முன்பு இப்படி சொல்லாத அமித்ஷா, இந்த முறை மட்டும் ஏன் இப்படி உறுதியாக சொன்னார்? என்ற சந்தேகம் எழுந்தபடியே உள்ளது.

 பாஜக பலவீனம்

பாஜக பலவீனம்

ஒருவேளை தமிழகத்தில் அதிமுகவின் உட்கட்சி பூசலை கண்டும், அக்கட்சி நலிவடைந்து வருவதை கண்டும் இப்படி சொன்னாரா? அல்லது திமுகவின் பலவீனங்களை கண்டு இப்படி சொன்னாரா? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.. மாநிலங்களவை நியமன எம்பியாக இளையராஜா, கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா, கர்நாடகாவை சேர்ந்த வீரேந்திர ஹெக்டே, ஆந்திராவை சேர்ந்த விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் அடங்குவர். இவர்களுக்கு பதவி அறிவிக்கப்பட்ட பிறகுதான், தேர்வு செய்யப்பட்ட 4 பேரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அமித்ஷா ஏன் அப்படி பேசினார் என்பதும் ஓரளவு விளங்க ஆரம்பித்தது.

 25 எம்பிக்கள்

25 எம்பிக்கள்

இந்த 4 பேருக்கு பதவி தந்ததினால் மட்டுமே, பாஜகவுக்கு செல்வாக்கு பெருகிடுமா? ஓட்டுக்கள் கிடைத்துவிடுமா என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.. அதேசமயம், தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 24 எம்பிக்களை பாஜக பெறும்... இதை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்று அண்ணாமலை சொன்னதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. 25 எம்பிக்களையும் பாஜக வெல்லும் என்றால், பாஜக இந்த முறை தனித்து போட்டியிட போகிறதா? என்பது தெரியவில்லை. சமீபத்தில் நடந்த மதுரை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றார்.. இந்த 15 இடங்கள் ஒரே வாரத்தில் எப்படி 25 ஆகிவிட்டது என்பதும் கேள்வியாக உள்ளது..

 ஒற்றை இலக்கு

ஒற்றை இலக்கு

அதிமுகவின் தோளில் ஏறியே ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்தித்து வரும்நிலையில், 25 சீட்களை அதிமுக, பாஜகவுக்கு ஒதுக்குமா? என்பதும் கேள்விக்குறியே. அதிமுக இதுவரை பாஜகவுக்கு ஒதுக்கிய சீட்களை பார்த்தால், பெரும்பாலும் ஒற்றை இலக்கத்தில்தான் ஒதுக்கப்பட்டு வந்துள்ளன.. அவவ்ளவு ஏன், கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, பாஜகவுக்கு 5 சீட்தான் தப்ப்டடது.. 5 சீட் என்பது இந்த முறை 10 சீட்டாக மாறலாமே தவிர, ஒரேடியாக 25 சீட்டுகளை அதிமுக பாஜகவுக்கு வழங்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

 25 சீட்டுகளா?

25 சீட்டுகளா?

அப்படியே 25 சீட்களை அதிமுகவிடம் பெற்றுக் கொண்டாலும், வெறும் 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ள கட்சியால், 25 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியுமா? என்பது அடுத்தக் கேள்விக்குறியாக உள்ளது. களரீதியாக ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், திமுகவை விட அதிக பலத்தை பெற்றுள்ளது அதிமுகதான்.. இது கருணாநிதி காலம் முதலே இப்படித்தான் இருக்கிறது.. அதிமுகவுக்கு கிராமப்புற தொண்டர்களின் ஆதரவை யாராலும் இன்றுவரை அசைக்க முடியாமல் உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

Recommended Video

    காங்கிரஸ் இனப்பகைவன்... இவன் மனிதகுலப்பகைவன்... பாஜகவை விளாசிய Seeman *Live
     25 பேர் யார்?

    25 பேர் யார்?

    அப்படிப்பட்ட அதிமுக, இந்த முறை, அதிர்ச்சி தோல்வியை சந்தித்து ஆட்சியை நழுவவிட்டிருக்கும் நிலையில், அந்த கட்சியின் கூட்டணியில் உள்ள பாஜக, பலம்பொருந்திய திமுகவை வெல்லுமா? அதிமுகவையும் முந்தி கொண்டு மேலே எழுமா? அப்படியே எழுந்தாலும் 25 தொகுதிகளிலும் வெல்லுமா? என்பது தெரியவில்லை.. இருந்தாலும் அண்ணாமலை அவ்வளவு உறுதியாக 25 சீட் எந்த நம்பிக்கையில் சொல்லி இருப்பார் என்பது அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுக்குமே குழப்பமாக இருக்கிறதாம்.. பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+