சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராஜதந்திரம்".. அந்த பக்கம் ஓபிஎஸ்.. இந்த பக்கம் திமுக.. அசால்ட்டாக காய்நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2 ராஜ்ய சபா சீட்டை யார் யாருக்கு வழங்க போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை பெறுவதற்கு ஏகப்பட்ட பேர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.. இதில், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்க போகிறது..

வெந்த புண்ணில் வேல்...ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய ஜி.கே.வாசன் எதிர்ப்பு வெந்த புண்ணில் வேல்...ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய ஜி.கே.வாசன் எதிர்ப்பு

மொத்தமுள்ள இடங்களில் திமுக 3, அதிமுக 2, காங்கிரஸ் 1 இடத்தில் போட்டியிட உள்ளன. திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக சார்பில் இன்னும் இழுபறியே நீடிக்கிறது.

 குழப்பம்

குழப்பம்

2 பதவிகளுக்கு ஏகப்பட்ட நபர்கள் விருப்ப மனு தந்துள்ளனர்.. ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் எடப்பாடி சிக்கி உள்ளார்.. அதேசமயம், இந்த சீட் விவகாரத்திலும் எடப்பாடியின் கையே ஓங்கும் என்றும் கணிக்கப்படுகிறது.. காரணம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வளர்மதி என்று பல சீனியர்களே முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.. இதில், ஜெயக்குமார், சி.வி சண்முகம் இருவரையும் ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்க போவதாக கூறப்படுகிறது.

சீனியர்கள்

சீனியர்கள்

இது மற்ற சீனியர்களுக்கு கடுப்பை தந்துள்ளது.. அப்படின்னா, எந்த பதவி என்றாலும் அதை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு தான் தர வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட 2 பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால், ஓபிஎஸ் தரப்பும் டென்ஷனில் உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால், எடப்பாடி கணக்கோ 2 விதமாக மாதிரியாக உள்ளதாம்.. எப்படியும் 2024 எம்பி தேர்தலில் பாஜகவே பிரதான இடத்தை பிடித்து ஆட்சியை பிடித்து விடும் என்பதால், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நம்புகிறாராம்..

பாஜக

பாஜக

அதுமட்டுமல்ல, அந்த நேரத்துல ராஜ்யசபா எம்பியாக இருக்கும்பட்சத்தில், தேர்தலில் போட்டியிடலாமேலேயே ஸ்டிரைட்டாக அந்த நபர்களை அமைச்சராகிடலாம் கணக்கு போடுவதால்தான், தன் ஆதரவாளர்களுக்கே அந்த பதவியை வழங்க எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறாராம்.. இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை 4 பேர் அறிவிக்கப்பட்டுவிட்டனர்..

திமுக

திமுக

காங்கிரசுக்கு ஒரு பதவி என்றார்கள்.. ஆனால், அங்கு இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவேளை ஐந்தாவது வேட்பாளரை திமுகவே களமிறக்கினால், அந்த வேட்பாளரை தோற்கடிக்க அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும்.. அதனால்தான், பாமக, பாஜக ஆதரவை அதிமுக கேட்கவும் , அந்த கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவுகரம் நீட்டியது.. இப்போது, திமுக 5வது நபரை களமிறக்கினாலும், எடப்பாடிக்கு கவலை இல்லை..

 எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

ஆக மொத்தம் எந்த பக்கம் இருந்து பந்து வீசினாலும், அதை சிக்ஸர் அடிக்கும் சூட்சுமத்தை எடப்பாடி பழனிசாமி அரங்கேற்றி வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.. இருந்தாலும் அந்த பதவியை யாருக்கு தர போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. ஆரம்பத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என ஆளுக்கு ஒரு பதவியை வழங்குவதாக முடிவெடுத்த நிலையில், 2 பதவியுமே எடப்பாடி ஆதரவாளருக்கு தரப்படுமானால், மீண்டும் கட்சிக்குள் பூகம்பம் வெடித்தாலும் வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!

English summary
How is Edapadi Palanisamy going to solve the next mess and will dmk announce fifth candidate எடப்பாடி பழனிசாமி 2 ராஜ்ய சபா சீட்டை யார் யாருக்கு வழங்க போகிறார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X