சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரூட் மாறுதே".. மிகப்பெரிய திருப்பத்தை நோக்கி செல்லும் அதிமுக.. இது மட்டும் நடந்தது எல்லாமே மாறும்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அக்கட்சி ஜாதி ரீதியிலான மோதலை நோக்கியும், ஜாதி ரீதியிலான மாற்றத்தை நோக்கியும் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உட்கட்சி வட்டார தகவல்களும் அதிமுகவில் மிகப்பெரிய ஜாதி மோதலுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளதாக கூறுகின்றன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. எடப்பாடி ஆதரவாளர்கள், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில்தான் அதிமுகவில் நிலவும் மோதல் வெறும் அதிகார மோதல், ஆதரவு மோதல் என்பதை தாண்டி ஜாதி ரீதியிலான மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. எந்த ஜாதியினருக்கு அதிமுகவில் "பவர்" இருக்கிறது என்பதை காட்டும் மோதலாக இந்த மோதல் உருவெடுத்து உள்ளது.

எடப்பாடி vs ஓபிஎஸ் என்பது போய் மேரு மண்டலம், தென் மண்டலத்தில் வலுவாக இருக்கும் ஒரு சில ஜாதிகள் இடையிலான மோதலாக இந்த பிரச்சனை மாறி வருகிறது.

பன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னுபன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னு

செங்குட்டுவன் பேச்சு

செங்குட்டுவன் பேச்சு

பொதுக்குழுவிற்கு முன்பாகவே தங்கள் பக்கம் நிர்வாகிகளை இழுப்பதில் ஜாதி ரீதியிலான அணுகுமுறை இருந்தது. முக்கியமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஜாதியினர் எடப்பாடிக்கும், தென் மண்டலத்தை சேர்ந்த பல்வேறு ஜாதியினர் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவாக இருந்தனர். ஆனால் வெளிப்படையாக இந்த ஜாதி ஆதரவை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக மூத்த தலைவரும் , முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாதி குறித்து வெளிப்படையாக பேசினார். அவரின் பேச்சு தமிழ்நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ''நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்.

மோதல்

மோதல்

அடுத்து எங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும் . ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும்.. இரண்டு கத்திகள் இருக்க முடியாது.. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்" என்று பேசினார்.இவரின் இந்த ஜாதி ரீதியான பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த பேச்சை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது கட்சிக்குள் ஜாதி ரீதியிலான பிளவு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

எடப்பாடி ஆதரவாளர்

எடப்பாடி ஆதரவாளர்

இந்த நிலையில்தான் நேற்று வெளியாகிய ஆடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. . ராமநாதபுரத்தை சேர்ந்தவர் களரி தியாகராஜன். இவர் திருப்புல்லாணி ஒன்றியத்தின் அதிமுக துணை செயலாளராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான இவர், இனி அதிமுகவில் எடப்பாடி ஜாதிதான் ராஜ்ஜியம் செய்யும். இஷ்டம் இருந்தால் இருங்கள்.. இல்லையென்றால் அதிமுகவை விட்டு செல்லுங்கள். அடுத்து எடப்பாடிதான் அதிமுக. அவர்தான் அடுத்த முதல்வர். அவர் ஜாதிதான் முதல்வர். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இருங்கள். இல்லையென்றால் அரசியலை விட்டே சென்று விடுங்கள். நிறைய கட்சி இருக்கிறது. அதில் ஒன்றில் சேருங்கள்., என்று காட்டமாக பேசிய ஆடியோ வெளியானது.

ஓபிஎஸ் காய் நகர்த்தல்

ஓபிஎஸ் காய் நகர்த்தல்

இந்த ஆடியோ மூலம் அதிமுகவில் எடப்பாடி தரப்பின் ஜாதி ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் முக்குலத்தோர் ஆதரவை பெற தீவிரமாக முயன்று வருகிறார். மதுரைக்கு இன்று சென்றுள்ள அவர் முக்குலத்தோர் ஆதரவையும், அந்த பிரிவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் ஆதரவையும் பெற தீவிரமாக முயன்று வருகிறார். தென் மண்டலத்தில் இப்போதே ஜாதி ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரண்டு வருகிறது.

சசிகலா மூவ்

சசிகலா மூவ்

போதாக்குறைக்கு சசிகலா தரப்பும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளது. இவர்களும் டெல்டாவில் முக்குலத்தோர் சொந்தங்களை ஓரணியாக திரட்டி வருகிறார்கள். இப்போது இவர்களுக்கான ஆதரவு குறைவாக இருப்பது போல தோன்றினாலும் தேர்தல் நேரத்தில் முக்குலத்தோர் பிரிவினை அதிமுகவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வாக்குகளை கண்டிப்பாக பிரிக்கும். இந்த முக்குலத்தோர் பிரிவினையை கட்டுப்படுத்தவே எடப்பாடி பழனிசாமியும் தென் மண்டலத்தில் ஆர்.பி உதயகுமாரை களமிறக்கி உள்ளார்.

எடப்பாடி மூவ்

எடப்பாடி மூவ்

முக்கியமாக அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமாரை எடப்பாடி தேர்வு செய்தது மிகப்பெரிய மாஸ்டர் ஸ்டிரோக்காக பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தென் மண்டலத்தில் வளர்த்துவிடுவதாக கூறப்படுகிறது. இரண்டு பேருமே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் முக்குலத்தோர் ஆதரவை பெரும் வகையில் எடப்பாடி இப்படி செய்ததாக கூறப்பட்டது. முக்குலத்தோர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சாயாமல் இருக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆர் பி உதயகுமாரை வளர்த்துவிடுவதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகள் புலம்பல்

நிர்வாகிகள் புலம்பல்

இப்படி கட்சியில் அதிகார மோதல் கிட்டத்தட்ட ஜாதி ரீதியிலான மோதலாகவே உருவெடுத்து விட்டது. அக்கட்சி ஜாதி ரீதியிலான மோதலை நோக்கியும், ஜாதி ரீதியிலான மாற்றத்தை நோக்கியும் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இத்தனை காலம் அதிமுகவில் ஜாதி இல்லாமல்.. ஜெயலலிதா.. எம்ஜிஆர் என்ற இரண்டு பேரின் முகத்திற்காக உழைத்த நிர்வாகிகள் மத்தியில் இந்த மோதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எந்த கட்சியில சார் ஜாதி இல்லை. எல்லா கட்சியிலும் இருக்கும்.

எந்த கட்சியில் இல்லை?

எந்த கட்சியில் இல்லை?

ஆனா யாரும் இப்படி பொதுவில் ஜாதி சொல்லி பேச மாட்டாங்க. ஆனால் அதிமுகவில் இப்போது அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதுதான் கவலை அளிக்கிறது என்கிறார்கள் தொண்டர்கள். அதேபோல் அக்கட்சி ஜாதி ரீதியாக பிளவு பட்டு வருவதாகவும், முக்குலத்தோர், கவுண்டர்கள் இடையே பிளவு ஏற்பட்டு நிர்வாகிகள் பிரியும் நிலை ஏற்பட்டால் அது அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கிறார்கள். அதாவது இந்த ஜாதி மோதல் வரும் காலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை கூறு போடும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

English summary
How is Edappadi Palanisamy vs O Panneerselvam fight in AIADMK becoming a caste issue in the party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X