Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவே ஆடிப்போயிடுச்சே.. அஸ்திவாரத்தையே ஆட்டிப்படைக்கும் மூவ்! அடித்து தூக்கிய தமிழ்நாடு அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் தைவானைச் சேர்ந்த ஷூடவுன் குழுமத்தின் கூட்டு நிறுவனமான ஜேஆர் ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தில் மேலும் இரண்டு உற்பத்தி வசதிகள் மற்றும் லெதர் உதிரிபாக கிளஸ்டர்களை அமைப்பதாக அறிவித்து உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் தனது இருப்பை விரிவுபடுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. . இந்நிறுவனம் ஏற்கனவே பெரம்பலூரில் 'க்ராக்ஸ்' வகை காலணிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்காக சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

investment government of tamil nadu tamilnadu government

சென்னையில் இருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த 50 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்த உற்பத்தி பிரிவு தற்போது இப்பகுதியில் சுமார் 1,700 வேலை வாய்ப்புகளை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உருவாக்கியுள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களில் (உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக) விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும் இரண்டு சர்வதேச காலணி பிராண்டுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.. இரண்டு மாவட்டங்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவிலேயே முதல் மையம் ஆகும் இது. இந்த மையம் இனி உலகம் முழுக்க அடிடாஸ் காலணிகளை ஏற்றுமதி செய்யும்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் முதலீடுகள் பெருகி வருகின்றன. மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக தென் மாவட்டங்களில், மேற்கு மாவட்டங்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழிற் புரட்சி: மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முன்னேற்றம்: காலணிகளைப் பொறுத்தவரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிக அளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளும் மிகப்பெரிய உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது.

இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், 23.8.2022 அன்று "தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022" தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது.

சிப்காட் நிறுவனம்: "அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி" என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்துள்ளது. இப்பூங்காவில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.இந்நிறுவனம், 2028-ஆம் ஆண்டிற்குள் 2,440 கோடி ரூபாய் முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அடிடாஸ்: அந்த வகையில் உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவிலேயே முதல் மையம் ஆகும் இது. இந்த மையம் இனி உலகம் முழுக்க அடிடாஸ் காலணிகளை ஏற்றுமதி செய்யும்.

அடுத்த சில மாதங்களில் இந்த தொழிற்சாலை இயங்க தொடங்கும். அதோடு 3 வருடங்களில் முழுமையாக செயல்பட்டு பல ஆயிரம் காலணிகளை உருவாக்கும். உலகம் முழுக்க சென்னையில் இருந்து அடிடாஸ் காலணிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+